வெறும் 398 ரூபாயில் BSNL கொடுக்கும் சூப்பர் prepaid திட்டம்

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) தனது ப்ரீபெய்ட் (prepaid) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2021, 07:31 PM IST
  • BSNL கர் வாபாசி போஸ்ட்பெய்ட் திட்டம்
  • பிஎஸ்என்எல்-இன் 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ 398 புதிய ப்ரீபெய்ட் திட்டம்
  • BSNL-இன் Rs 1 per day plan
வெறும் 398 ரூபாயில் BSNL கொடுக்கும் சூப்பர் prepaid திட்டம் title=

Rs 398 BSNL Plan: அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) தனது ப்ரீபெய்ட் (prepaid) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் டேட்டா வவுச்சர்கள் திட்டம் (BSNL data vouchers plan) மாதத்திற்கு ரூ .398 விலையில் வரம்பற்ற தரவு மற்றும் குரல் அழைப்புகளை உள்ளூர் மற்றும் தேசிய அளவில் வழங்குகிறது. இந்த 398 ரூபாய் BSNL பிஎஸ்என்எல் திட்டத்தில் நாளொன்றுக்கு  ரோமிங்கில் 100 இலவச எஸ்.எம்.எஸ் (SMS) வசதியையும் தருகிறது. 

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ 398 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், Rs 398 STV திட்டம் சென்னை (Chennai) மற்றும் ஹரியானா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.

Also Read | வெறும் ₹.75-க்கு வரம்பற்ற அழைப்பு, 1GB தரவை வழங்கும் Jio-வின் புதிய திட்டம்!

BSNL-இன் Rs 1 per day plan
மலிவான ரீசார்ஜ் திட்டம் என்ற வகையில், தினசரி ஒரு ரூபாய் என்ற திட்டம் ஒன்றையும் பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், பயனர்களுக்கு முழு ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்திற்கு 365 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இது முழு ஓராண்டுக்கு செல்லுபடியாகும் - அதாவது இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை எடுக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ஆண்டு முழுவதும் நாளொன்றுக்கு 1 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த பிஎஸ்என்எல் (BSNL) திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதியுடன் தினமும் 2 ஜிபி (2GB) தரவு (Data) வழங்கப்படும். முதல் 60 நாட்களில், 250 நிமிடம் வரை இலவசமாக பேசலாம். தினசரி 250 நிமிடங்களுக்குப் பிறகு, அடிப்படை திட்டத்தின் படி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில், தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) இலவசம்.  

Also Read | உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்: பயனர்களிடம் பணிந்த WhatsApp!

இந்த பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மேற்கு வங்கம், வடகிழக்கு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள்.

பி.எஸ்.என்.எல் கர் வாபாசி போஸ்ட்பெய்ட் திட்டம் (BSNL Ghar Wapasi Postpaid Plan)

பி.எஸ்.என்.எல் கர் வபாசி போஸ்ட்பெய்ட் (BSNL Ghar Wapasi Postpaid) திட்டத்தை 399 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் ஒவ்வொரு மாதமும் 70 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும், ரோல்ஓவர் (rollover) வசதியின் கீழ், 210 ஜிபி தரவைப் பெறலாம். இது தவிர, பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 525 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது, இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 85 ஜிபி டேட்டா கிடைக்கும்

Also Read | Parler என்றால் என்ன, டிரெண்டில் வந்தது எப்படி?  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News