இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமின் முதலீடுகளை கவனித்து வரும் ஜபீர் மோதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது கைதுக்கு பின்னர் நிறைய முக்கிய விசியங்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்து ரூ.40 கோடியை அவரது கூட்டாளியே சுருட்டியுள்ளான். இது தொடர்பாக தாவூத் ஆட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில்:- காலிக் அஹமத் என்பவன், டில்லியை சேர்ந்தவரிடம் ரூ.45 கோடியை தாவூத்திற்காக வாங்கியுள்ளான். இதில் ரூ.40 கோடியை வெளிநாட்டில் உள்ள தனது ஆட்களுக்கு ஹவாலா மூலம் அனுப்பி விட்டு, தான் ரூ.5 கோடி வைத்துக்கொண்டுள்ளான். தற்போது அவன் மாயமாகியுள்ளான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.