தாவூத்திடம் ரூ.40 கோடி சுருட்டல்- டி நிறுவனம் விசாரணை

Last Updated : Sep 12, 2016, 01:52 PM IST
தாவூத்திடம் ரூ.40 கோடி சுருட்டல்- டி நிறுவனம் விசாரணை title=

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்து ரூ.40 கோடியை அவரது கூட்டாளியே சுருட்டியுள்ளான். இது தொடர்பாக தாவூத் ஆட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில்:- காலிக் அஹமத் என்பவன், டில்லியை சேர்ந்தவரிடம் ரூ.45 கோடியை தாவூத்திற்காக வாங்கியுள்ளான். இதில் ரூ.40 கோடியை வெளிநாட்டில் உள்ள தனது ஆட்களுக்கு ஹவாலா மூலம் அனுப்பி விட்டு, தான் ரூ.5 கோடி வைத்துக்கொண்டுள்ளான். தற்போது அவன் மாயமாகியுள்ளான்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் வசிக்கும் தாவூத் ஆட்கள் காலிக் அகமது மற்றும் ஜாபீர் மொடி இடையே நடந்த மொபைல் பேச்சை ஒட்டுக்கேட்டதன் மூலம் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. 

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக டில்லியிலிருந்து தாவூத் ஆட்கள் கனடாவுக்கு விசாரணை நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மோசடி செய்த காலிக் அஹமத் மணிப்பூரில் பதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவன், ரூ.40 கோடியை தனது ஆட்கள் மூலம் பனாமா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

Trending News