ICSE: நாளை 10-12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எப்படி பார்ப்பது? முழு விவரம்

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 10, 2020) வெளியிடப்படும் என இந்திய பள்ளி கல்வி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (ICSE Board) அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 09:16 PM IST
ICSE: நாளை 10-12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எப்படி பார்ப்பது? முழு விவரம் title=

ICSE Board result 2020: 10 ஆம் வகுப்பு (CISCE) மற்றும் 12 ஆம் (ICSE) வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 10, 2020) வெளியிடப்படும் என இந்திய பள்ளி கல்வி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (ICSE Board) அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிஎஸ்இ வாரியம் cisce.org இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் முடிவின் அறிவிப்பு குறித்து முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வாரியம் (Indian School Certificate Examination) 10 மற்றும் 12 ஆம் தேதிகளின் முடிவுகளை ஜூலை 10 ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடும். பள்ளி கவுன்சில் போர்ட்டலுக்குச் சென்று உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் முடிவை தெரிந்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில், மாணவர்கள் நேரடியாக ஐசிஎஸ்இ வலைத்தளத்திற்குச் சென்று அவர்களின் தெரிவு முடிவுகளை சரிபார்க்க முடியும். இது தவிர, எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை சரிபார்க்க முடியும்.

READ MORE  - தேர்வுகளிலிருந்து மன அழுத்தத்தைக் கையாள டாப் 5 குறிப்புகள்

2020 ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகளை கீழே உள்ள வலைதளத்தில் காணலாம்:
cisce.org
results.cisce.org

முடிவை எப்படிப் பார்ப்பது?
இணையதளத்தில் நுழைந்து முடிவுகள் 2020 இணைப்பைக் கிளிக் செய்க.
பாட விருப்பத்திற்குச் சென்று, ISCE / ISC 2020 முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய பக்கம் திறக்கும். இங்கே மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட ஐடி, குறியீட்டு எண் சமர்ப்பிக்க வேண்டும். 
இதன் பிறகு திரையில் தேர்வு முடிவுகள் காணப்படும். அதை பதிவிறக்கம் செய்து ஒரு அசந்து`அச்சு அசல் எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். 

READ MORE - ஐசிஎஸ்இ வாரியம் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

எஸ்எம்எஸ் மூலம் ஐசிஎஸ்இ முடிவு: எவ்வாறு பெறுவது?
வலைத்தளத்திலிருந்து முடிவுகளைப் பார்ப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் முடிவை எஸ்எம்எஸ் மூலம் பெறலாம். இதற்காக, மொபைலின் செய்தி பெட்டியில் சென்று உங்கள் தனிப்பட்ட ஐடியை ஐசிஎஸ்இ அல்லது ஐஎஸ்சியுடன் தட்டச்சு செய்து 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

10 வது முடிவு வகைக்கு -
ஐசிஎஸ்இ 1234567
12 வது முடிவு வகைக்கு -
ஐ.எஸ்.சி 1234567
(* இங்கே 1234567 க்கு பதிலாக உங்கள் தனிப்பட்ட ஐடியை எழுத வேண்டும்.)

உதவி பெறுவது எப்படி
ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் ஐசிஎஸ்இ போர்டு ஹெல்ப் டெஸ்கை தொடர்பு கொள்ளலாம் -
1800-267-1760 & மெயில் aஅனுப்ப - ciscehelpdesk@orionic.com

Trending News