புதுடெல்லி: நாம் பலமுறை பயணங்களை மெற்கொள்ளும் போது, நம் பொருட்களை எடுத்துச் செல்வது என்பது நமக்கு சவாலான விஷயமாக மாறி விடுகிறது. அதிக லக்கேஜ் (luggage) இருக்கும் பட்சத்தில், அவற்றை ரயில் நிலையம் வரை கொண்டு செல்வதிலும், அங்கிருந்து ரயில் ப்ளாட்ஃபாரம் வரை கொண்டு செல்வதிலும் நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிரோம்.
இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளுக்காக புதிய வசதியை விரைவில் இந்தியன் ரயில்வே (Indian Railways) அறிமுகப்படுத்த உள்ளது. ரயில்வே இப்போது உங்கள் வீட்டிலிருந்து உங்கள் ரயில் வரை உங்களது லக்கேஜை அதாவது பயண பொருட்களை கொண்டு செல்லும். முதல் முறையாக, இந்திய ரயில்வே ‘பேக் ஆன் வீல்ஸ்’ (Bag On Wheels) சேவையைத் தொடங்க உள்ளது.
நீங்கள் உங்கள் இலக்கை அடைந்த பிறகு, ரயில்வே உங்கள் சாமான்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும். துவக்க நிலையில் இந்த சேவை புது தில்லி, டெல்லி ஜங்ஷன், ஹஸ்ரத் நிஜாமுதீன், டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி சராய் ரோஹில்லா, காஜியாபாத் மற்றும் குருகிராம் ரயில் நிலையங்களில் மட்டும் கிடைக்கும்.
இதற்கான, முன்பதிவை ரயில்வே செயலியின் மூலம் செய்ய வேண்டும். ரயில், நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு உங்கள் பொருட்களை உங்கள் ரயிலில் வழங்குவது ரயில்வேயின் பொறுப்பாகும். இந்த டோர் டு டோர் சேவைக்கு பயணிகள் தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ALSO READ: பெண்களுக்கு சூப்பர் பரிசசை வழங்கினார் பியூஷ் கோயல், இந்த பெரிய தள்ளுபடி அறிவிப்பு!
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தனியாக பயணம் செய்யும் நபர்கள் ஆகியோருக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும். பல புதிய நடவடிக்கைகள் மூலம் வருவாயை அதிகரிக்க ரயில்வே தொடர்ந்து முயன்று வருவதாக வடக்கு மற்றும் வட மத்திய ரயில்வே பொது மேலாளர் ராஜீவ் சவுத்ரி தெரிவித்தார். இந்த திசையில் பணிபுரியும் டெல்லி பிரிவு, NINFRIS திட்டத்தின் கீழ், செயலி அடிப்படையிலான ‘Bags On Wheels’ வசதிக்கான ஒப்பந்தங்களை வழங்கி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
BoW செயலி மூலம் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது), ரயில் பயணிகள் தங்கள் பொருட்களை தங்கள் வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு (Railway Station) அல்லது ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு கொண்டு வர விண்ணப்பிக்கலாம். பயணிகளின் பொருட்களை பாதுகாப்பாக, அவர்களது வீட்டிலிருந்து பெற்று அவர்களது முன்பதிவு விவரங்களின்படி ரயில் கோச்களிலும், ரயிலிலிருந்து வீடு வரையிலும் ஒப்பந்தக்காரர்கள் ஒப்படைப்பார்கள்.
இந்த வசதிக்காக, ரயில் பயணிகளிடம் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால், இந்த கட்டணத்தில் வீட்டிலிருந்து ரயில் கோச் வரையிலும், ரயிலிலிருந்து வீடு வரையிலும் பாதுகாப்பாக பயணிகளின் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR