பண்டிகை கால சிறப்பு ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதா... இந்திய ரயில்வே கூறுவது என்ன..!!

பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே திங்கள் முதல் நவம்பர் 30 வரை 392 பண்டிகை கால சிறப்பு ரயில்களின் சேவையை தொடக்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 09:31 AM IST
  • பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே திங்கள் முதல் நவம்பர் 30 வரை 392 பண்டிகை கால சிறப்பு ரயில்களின் சேவையை தொடக்கியுள்ளது.
  • சில ஊடங்களில், வெளியான அறிக்கைகளில், இந்திய ரயில்வே பண்டிகை கால சிறப்பு ரயில்களின் கட்டணத்தை உயர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது.
பண்டிகை கால சிறப்பு ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதா... இந்திய ரயில்வே கூறுவது என்ன..!! title=

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் பயணிகளின் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே (Indian Railway) திங்கள் முதல் நவம்பர் 30 வரை 392 திருவிழா சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்தது. இந்த ரயில்கள் ஏற்கனவே நாடு முழுவதும் இயக்கபப்டும் ரயில்களை தவிர கூடுதலாக இயக்கப்படும்.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளில், அதாவது புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியான அறிக்கைகளில், இந்திய ரயில்வே பண்டிகை கால சிறப்பு ரயில்களின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகக் கூறியது. ரயில் பயணிகள் கட்டண உயர்த்தப்படும் என்பது குறித்த செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த, ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை வெளியான செய்தி, முற்றிலும் தவறானது என்று கூறியது.

ALSO READ | அக்டோபர் 22ம் தேதியை கருப்பு தினமாக இந்தியா அறிவிப்பு! காரணம் என்ன தெரியுமா?

திருவிழா மற்றும் கோடை விடுமுறை காலங்களில் இயங்கும் சிறப்பு ரயில்களுக்கான (Special Trains)  கட்டணம், வழக்கமாக இயங்கும் ரயில்களின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் வேறுபட்டதாக இருக்கும் என ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

திருவிழா காலங்களில் ரயில் பயணிகளின் கட்டண உயர்வு தொடர்பான செய்திகள் தவறானவை. சிறப்பு ரயில்களுக்கான கட்டணம், அதவது பண்டிகை காலம், கோடை விடுமுறை காலம் போன்ற காலங்களில், இயக்கப்படும் ரயில் சேவைகளுக்கான கட்டணம்,  விதிமுறைகளின் படி, வழக்கமான மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வித்தியாசமானதாகவும் அதிகமாகவும் இருக்கும் ”என்று ரயில்வே தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் பயணிகளின் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே, இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, லக்னோ போன்ற இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இப்போது வரை, ரயில்வே 300 க்கும் மேற்பட்ட மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களை சேவையை தொடக்கியுள்ளது என ரயில்வே கூறியுள்லது.

திருவிழா சிறப்பு ரயில்கள் 55 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் மற்றும் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள்  வசூலிக்கப்படும் எனவும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ | 2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம்! 2020-ல் எப்படி? ஒரு அலசல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News