அரசுப் பஸ்சும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலி
அரசு பஸ் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, மேட்டூரில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், சேலத்திலிருந்து தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர் என கூறினார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு செப்டம்பர் 20-ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீரை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா, கருப்பண்ணன், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 1 கோடி மதிப்பிலான 716 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வந்து பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. நிதிநிறுவனத்தின் பின்புறமாக ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லாக்கர்களை உடைத்து, 6 பெட்டிகளில் 491 பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அகில இந்திய அளவிலான சி.ஏ. தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார். இத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது20) 800-க்கு 613 மார்க்குகள் அதாவது 76.63 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றார்.
வினுபிரியா தற்கொலை வழக்கில் சுரேஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங் தெரிவித்தார். அந்த இளைஞர் விசைத்தறித் தொழிலாளராக இருந்து வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.