நிலம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பத்திர பதிவுத்துறை கட்டணம் 4 சதவீத்ததில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டதிற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார். செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த தொகை வழங்கப்படும்
ஒன்றிய அரசை விட தமிழக அரசின் நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதாக பட்ஜெட் உரை வாசிப்பின் தொடக்கத்திலேயே கூறி அடுத்தடுத்த திட்டங்களை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
TN Budget 2023 Expectations: தமிழக பட்ஜெட்டில் தொழில் வாய்ப்பை பெருக்கும் வகையிலான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சுய தொழில் கடன், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கடன் மற்றும் தொழில் துறையினருக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழக பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த உதவித் தொகையை சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு கொடுப்பதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கிறது.