விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேர் செட்களில் வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 19-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
காயம் காரணமாக தடுமாறிய சிலிச், 2வது செட்டில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடினார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா தோல்வியுற்றார். இதனால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்த ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் போட்டியை வென்ற ஸ்பெயினின் முகுருஸா, 3-6, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 124-வது இடத்தில் இருந்த ஜானா செப்லோவாவிடம் தோல்வி கண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.