பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க முயற்ச்சி: ராஜ்நாத் சிங்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து செய்து வருகின்றது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்!

Last Updated : May 31, 2018, 05:11 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க முயற்ச்சி: ராஜ்நாத் சிங்! title=

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 78.35 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.35 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,,,!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க முயற்சித்து வருகிறது என்றார். 

Trending News