உத்திரப்பிரதேச மாநிலத்தில், தன் வீட்டு பெண்களுக்காக கழிவரை கட்டவேண்டி 7 ஆடுகளை விற்ற சித்தாபூர் மனிதர் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளார்!
உத்திரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூரை சேர்ந்தவர் ஜாப்பார் ஷா. தன் வீட்டு மகளிர்களுக்காக கழிவரை வேண்டி, தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டுக்குட்டிகளை விற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் ஜோக்கர். இப்படத்தில் மனைவியின் தேவைக்காக கழிவரை கட்ட முயற்சிகள் மேற்கொண்டு அரசாங்கத்தின் ஊழல் காரணமாக தன் மனையினை நடைப்பினமாக மாற்றிவிடுவார்.
அரசு சலுகளை பெற பொதுமக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என தெளிவாக எடுத்துரைத்தப் படம். இந்த படத்தில் வரும் நாயகனைப் போலவே, உத்திரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூரை சேர்ந்த ஜாப்பார் ஷா, அரசாங்கதின் உதவி நாடி கிடைக்காமல் தன் வாழ்வாதரமாக இருந்த ஆட்டு குட்டிகளை சுமார் 15000-க்கு விற்று கழிவறை கட்டியுள்ளார்.
இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து அப்பகுதி மாவட்ட பஞ்சாயத் ராஜ் அதிகாரி, துளசி ராம் அவர்கள் கழிவறை கட்டியதற்கான விலை அவருக்கு அளிக்கப்படும் எனவும், அந்த பணத்தினைக் கொண்டு அவர் தனது ஆட்டினை மீட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்!