அடுத்து அதிமுகதான் ஆளும்கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் பொதுக்குழுக் கூட்டம்: சி.விஜயபாஸ்கர்
மக்கள் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகியுள்ள திமுகவைப் புறந்தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பதற்கு அடித்தளம் போடும் கூட்டமாக இந்தப் பொதுக்குழு அமைவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.