பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியை கோவிலுக்குள் ஏன் வந்தாய் என ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி நெஞ்சில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.