கேரளாவில் பிரேசில், அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் இடையே அடிதடி மோதல்

கேரளா மாநிலம் கொல்லத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளை ஆதரிக்கும் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் கால்பந்து ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் மீது சக்திகுளங்கரா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 160 (கலவரம் செய்வது) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Video ThumbnailPlay icon

Trending News