பிரபல நடிகர் வீட்டில் கொள்ளை: காவலாளி மீது சந்தேகமா?

'எல்லாம் அவன் செயல்', 'அவன் இவன்', 'அழகர் மலை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ) ஆர். கே(63). இவர் தனது குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

 ராதாகிருஷ்ணா நேற்று (நவ. 10) , வெளியே சென்றுவிட்டதால் வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்து வந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். 

 

Trending News