ஏழை மாணவர்கள் ''டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது’ -விஷால்!

தமிழ்நாட்டில் இனி ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்று விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!  

Last Updated : Jun 5, 2018, 06:22 PM IST
ஏழை மாணவர்கள் ''டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது’ -விஷால்! title=

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார். இந்த நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவராகி விடலாம் என்ற கனவில் இருந்த பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. 

இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த  பிரதீபாவின் உடல் பிரேதபரி சோதனைக்கு பிறகு பிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாணவி பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஷால்,,,!

நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறார் பிரதீபா. இந்தச் செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைகொடுக்க தயாராக இருக்கிறேன். நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வித்துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

Trending News