பாகிஸ்தான் நாட்டில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கைபர் மாகாணத்தின் தலைநகராக உள்ள பெஷாவரில் கோதார் என்ற இடத்திலிருந்து சாடா நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குர்ரான் என்ற ஊரின் அருகே சக்தி வாய்ந்த குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் பெஷாவர் நகர அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை சீல் வைத்துள்ள போலீசார், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வேன் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.