அமெரிக்காவின் ஹவாய் தீவில் துப்பாக்கி சூடு; 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Last Updated : Dec 5, 2019, 09:10 AM IST
அமெரிக்காவின் ஹவாய் தீவில் துப்பாக்கி சூடு; 3 பேர் படுகாயம் title=

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. அங்கு தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் அங்கு திடீரென துப்பாக்கியால் சுடத்துவங்கினார்.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எனினும், காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர கூடும் என ஹவாய் நியூஸ் நவ் தெரிவித்து உள்ளது.

Trending News