கரீபியன் தீவுகளில் ஏற்பட்டுள்ள இர்மா சூறாவளியால் எட்டு பேர் பலி. மேலும் செயிண்ட் மார்டின் தீவு மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் மிக சக்திவாய்ந்த புயலாக அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள் இர்மா சூறாவளி தீவுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு பிராந்தியமான செயிண்ட் மார்டின் தீவை மிகவும் கடுமையான வேகத்தில் தாக்கியுள்ள இர்மா சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சேதங்களை உருவாக்கி வருகிறது.
"இது பெரும் பேரழிவு, தீவின் 95 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் நான் அதிர்ச்சியில் உள்ளேன்" என்று செயிண்ட் மார்டின் ஒரு உள்ளூர் குழுவின் தலைவரான டேனியல் கிப்ஸ், கரிபிக் இன்டர்நேஷனல் வானொலியில் கூறியுள்ளார்.
பிரஞ்சு உள்துறை மந்திரி ஜெரார்ட் கொலம்போம் பிரான்சின் இன்போ வானொலியில் கூறியது, எல்லா கடற்கரையையும் ஆய்வு செய்ய போதிய நேரம் இல்லை, என்றும், இதுவரை 23 பேர் காயமடைந்துள்ளனர். இர்மா சூறாவளியால் நான்கு தீவுகளில் குறைந்தபட்சம் 10 பேர் உயிர் இழந்துள்ளனர் என கூறினார்.