சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான "வசதிகளை" வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2022, 11:52 AM IST
  • சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் முதல் கட்டத்தை இந்தியா உருவாக்கி வருகிறது
  • துறைமுகம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக அத்தியாவசிய பொருட்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது.
  • இந்தியா-மத்திய ஆசியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் இணைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் தலிபான் அறிக்கை வந்தது.
சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு! title=

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான "வசதிகளை" வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தாலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையை மாஸ்கோவுடன் இணைக்கும் வகையிலான ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக செல்லும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து தாழ்வாரத்தில் சபாஹர் துறைமுகத்தை சேர்க்கும் "முன்மொழிவை" வரவேற்றுள்ளது. "இது தொடர்பாக தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க ஆப்கானிஸ்தான் தயாராக உள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் முதல் கட்டத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் 85 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஏனெனில் இது பிராந்தியம் முழுவதும், குறிப்பாக நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசியாவிற்கு பெரிய இணைப்பை வழங்குகிறது. இந்தியா, 6 மொபைல் ஹாபர் கிரேன்கள்-இரண்டு 140 டன்கள் மற்றும் நான்கு 100 டன் திறன்கள் மற்றும் $25 மில்லியன் மதிப்புள்ள பிற உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

இந்த துறைமுகம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான பொருட்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் உணவு பொருட்களை அனுப்பிய நிலையில், 75,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப இந்தியா சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தியது. டிசம்பர் 2018 முதல், இந்திய நிறுவனமான இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) செயல்பாடுகளை எடுத்துக் கொண்டபோது, துறைமுகம் 215 கப்பல்களையும் 4 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது. 

இந்திய முதலீடு மற்றும் இந்திய உள்கட்டமைப்பின் மறுமலர்ச்சி மற்றும் நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் தாலிபான் மிகவும் ஆர்வமாக உள்ள நிலையில், சபஹர் துறைமுகம் குறித்த தலிபான்களின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலிபானின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ஹம்துல்லா நோமானி மற்றும் நாட்டிலுள்ள இந்திய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் பாரத் குமார் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, புதிய காபூல் நகரத்தை உருவாக்க இந்திய முதலீட்டிற்கு தலிபான் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் டெல்லியில் நடந்த இந்தியா-மத்திய ஆசியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் இணைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் தலிபான் அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில், "நிலையான, அமைதியான, ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு என கூறபாட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கை ஆகியவற்றை வெளிப்படுத்திய கூட்டத்தின் கூட்டு அறிக்கையை பாராட்டியது.

மேலும் படிக்க |  இந்த 5 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்

அந்த அறிக்கையில் தலிபான்கள் "ஆப்கானிஸ்தானின் மண்ணில் இருந்து பிராந்தியத்திற்கும் உலகிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ அல்லது மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடவோ யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதியளித்துள்ளது. எனினும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான புகலிடமாக மாறுவது பற்றிய கவலை இந்தியாவிற்கு உள்ளது. மேலும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களான JeM மற்றும் LeT போன்றவை போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் புகலிடம் பெறக்கூடும் என்றும் இந்தியா கவலை கொண்டுள்ளது.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை முதல் இந்தியா-மத்திய ஆசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (NSA) கூட்டம் நடைபெற்றது. ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியா-மத்திய ஆசிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக இந்த சந்திப்பு அமைந்தது. 2023 மே மாதத்தில் கஜகஸ்தானில் நடக்கவுள்ள அடுத்த கூட்டத்திற்கு தாங்கள் அழைக்கப்படுவோம் என்று தலிபான் நம்புகிறது. அதன் மூலம், பாதுகாப்பு, மனித மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் நிறுவ உதவும் என்றும்,  குறிப்பாக அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் நன்மை பயக்கும் எனவும் தாலிபான் எண்ணுகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News