சீனாவுடனான CPEC திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும்: இம்ரான் உறுதி

CPEC திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் இந்த பிரம்மாண்டமான பன்முக முன்முயற்சி தேசத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் CPEC மறுஆய்வுக் கூட்டத்தில் இம்ரான் கான் தெரிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2020, 03:34 PM IST
  • CPEC திட்டம், 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது.
  • பலூசிஸ்தானில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங் மாகாணத்துடன் CPEC இணைக்கும்.
  • சீனாவின் BRI திட்டம் உலகளவில் பலத்த விமர்சத்துக்கு ஆளானது.
சீனாவுடனான CPEC திட்டம் வெற்றிகரமாக நிறைவடையும்: இம்ரான் உறுதி title=

அதிகரித்து வரும் கொரோனா (Corona) வைரஸ் தொற்றுக்கும், சரிந்துவரும் பொருளாதாரத்துக்கும் மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் (Pakistan Prime Minister) இம்ரான் கான் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை திட்டத்தை (CPEC) எந்த நிலையிலும் தன் அரசாங்கம் நிறைவு செய்யும் என உறுதிமொழி அளித்துள்ளார்.

60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டம், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான திட்டமாகும்.

இந்த திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் இந்த பிரம்மாண்டமான பன்முக முன்முயற்சி தேசத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் சிபிஇசி மறுஆய்வுக் கூட்டத்தில் இம்ரான் கான் (Imran Khan) தெரிவித்தார்.

"இந்த வழிப்பாதை பாக்கிஸ்தான்-சீனா (China) நட்பின் வெளிப்பாடாகும். அரசாங்கம் இதை  நிச்சயமாக வெற்றிகரமாக நிறைவு செய்து இதன் பயன்களை பாகிஸ்தான் குடுமக்கள் அனைவருக்கும் அளிக்கும்” என்றும் இம்ரான்  கான் தெரிவித்தார்.

திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்களை பாராட்டிய அவர், திட்டத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்க அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களை வலியுறுத்தினார்.

ALSO READ: பாகிஸ்தானில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை: அரசு மருத்துவர்கள் ராஜினாமா

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷியுடன், தொலைபேசி மூலம், CPEC பணித்திட்டம் குறித்து பேசினார். பலூசிஸ்தானில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங் மாகாணத்துடன் CPEC இணைக்கும். இது பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (BRI) கீழ் தீட்டப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றாகும்.

சீனாவின் BRI திட்டம் உலகளவில் பலத்த விமர்சத்துக்கு ஆளானது. இத்திட்டத்தின் மூலம் சீனா மற்ற நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், இத் திட்டத்தின் மூலம், சீனா, சிறிய நாடுகளை கடனில் ஆழ்த்தி விடுகிறது. உதாரணமாக, 2017 ஆம் ஆண்டு, தான் பட்ட கடனுக்கு பதிலாக, இலங்கை தனது ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம குத்தகைக்கு விட்டுள்ளது. 

ALSO READ: PoK-வில் கொரோனாவின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!!

Trending News