நேபாளத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பை அடுத்து U-Turn அடித்த நேபாள பிரதமர் ஒளி

நேபாளம் முன்னதாக, தனது நாட்டிற்கு எதிரான வகையில் இந்திய செய்தி சேனல்கள்  நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் என கூறி, இந்திய சேனல்கள் மீது நேபாளம் தடை விதித்தது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 16, 2020, 04:43 PM IST
நேபாளத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பை அடுத்து U-Turn அடித்த நேபாள பிரதமர் ஒளி

நேபாளம் முன்னதாக, தனது நாட்டிற்கு எதிரான வகையில் இந்திய செய்தி சேனல்கள்  நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் என கூறி, இந்திய சேனல்கள் மீது சிறிது நாட்களுக்கு முன் நேபாளம் தடை விதித்தது.

நேபாளத்தின் (Nepal) இந்த  தடை நடவடிக்கைக்கு  நேயர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், அனைத்து இந்திய செய்தி சேனல்களின் ஒளிபரப்பும்  இன்று காலை தொடங்கின.

காத்மாண்டு (Kathmandu): இந்தியாவுடனான (India) பதற்றத்திற்கு மத்தியில் நேபாளம் இந்தியாவிடம் தலைவணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேபாள அரசின் உத்தரவின் பேரில் இந்தியாவில் செய்தி சேனல்கள் மீதான தடையை கேபிள் ஆபரேட்டர்கள் நீக்கியுள்ளனர்.

ALSO READ | Kulbhushan Jadhav-வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும்: வெளியுறவுத் துறை

 

இந்திய சேனல்கள் மீதான நேபாள அரசின் தடைக்கு நேயர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், இந்திய செய்தி சேனல்களின் ஒளிப்ரப்பு இன்று காலை முதல்  தொடங்கியது. இருப்பினும், ஓளி அரசிடம் இருந்து இதுவரை, இது தொடர்பாக  எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.

கேபிள் ஆபரேட்டர்கள்  தாங்கல் விதித்த தடையை தாங்களே அகற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சில செய்தி சேனல்களுக்கு இன்னும் தடை உள்ளது.

சில காலமாக, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது  என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். நேபாளம் இந்தியாவின்  லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை, தங்கள் நாட்டின் பகுதிகளாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும், இந்த பகுதி இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை இந்தியா வலுவாக தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்

அது மட்டுமல்லாமல், பிரதமர் ஒளி (KP Sharma Oli) சமீபத்தில் அபத்தமான  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி, ராமர் இந்தியர் அல்ல நேபாளி என்று கூறீ சர்ச்சையை ஏற்படுத்தினார். அதோடு, நேபாளத்தில் தான் உண்மையான அயோத்தி உள்ளது என புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தியா கலாச்சார அத்துமீறல்  செய்தது என்று பிரதமர் ஓலி குற்றம் சாட்டியதோடு, போலி அயோத்தியை உருவாக்கி அதன் மூலம் நேபாளத்தின் கலாச்சாரத்தை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று அவர் கூறினார். இதற்கு அவருக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு தோன்றியது. அவர் கூறிஅய் இந்த விஷயங்களை அவரது ஆரசில் இருப்பவர்களே ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.