ஆணுறுப்பில் பூட்டு! இது செக்ஸ் விளையாட்டாம்... கடைசியில் துருப்பிடித்து, சுத்தியலால் அடித்து பரிதாபம்!

Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 28, 2023, 02:28 PM IST
  • இந்த விளையாட்டில் அவர்களில் ஒருவர் பூட்டைப் போடுவார், மற்றவர் சாவியை வைத்திருப்பார்.
  • அந்த நபரால் பூட்டை சுமார் மூன்று மாதங்களாக திறக்கவே முடியவில்லை.
  • அந்த பூட்டை அணிந்து குளித்து வந்ததால், அது துருப்பிடித்துவிட்டது.
ஆணுறுப்பில் பூட்டு! இது செக்ஸ் விளையாட்டாம்... கடைசியில் துருப்பிடித்து, சுத்தியலால் அடித்து பரிதாபம்!  title=

Bizarre Incident: ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் உள்ள ஒருவர், தனது ஆணுறுப்பில் போடப்பட்டுள்ள பூட்டை அகற்ற  டாட்டூ மற்றும் துளையிடும் நிபுணரிடம் சென்றுள்ளார். தனது துணையுடன் ஒரு செக்ஸ் விளையாட்டிற்காக ஆணுறுப்பு பகுதியில் பூட்டை போட்ட அவரால், சில மாதங்களாக அதை அகற்ற முடியாமால் சிரமப்பட்டுள்ளார்.  

சாவியுடன் சென்ற காதலி

அவர் எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த பூட்டை வாங்கி, அவ்வப்போது அதனை அதில் லாக் செய்து சாவியை காதலியிடம் கொடுத்து விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த நபருக்கும், அவரின் காதலிக்கும் காதல் முறிவு ஏற்பட்டதால், பூட்டிய பூட்டை திறக்காமால் சாவியுடன் காதலி  சென்றுவிட்டார். 

அந்த நபரால் பூட்டை சுமார் மூன்று மாதங்களாக திறக்கவே முடியவில்லை என கூறப்படுகிறது. முன்னாள் காதலியான அந்த பெண்ணிடம் இருந்து சாவியை போராடி வாங்கியும் அவரால் அந்த பூட்டை திறக்கவே முடியவில்லை. இதனால், தான் அந்த இடத்தில் இருந்து பூட்டை அகற்ற டாட்டூ மற்றும் துளையிடும் நிபுணரிடம் அவர் சென்றிருக்கிறார். 

டிக்டாக் வீடியோ

அந்த நபரின் பூட்டை ஆராய்ந்த பார்த்த நிபுணர் இதனை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டார். La Tuerta Piercer என ஆன்லைனில் அறியப்படும் அந்த நிபுணர், தனது 603,000 பின்தொடர்பவர்களுக்காக TikTokஇல் இச்சம்பவத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்க | KCNA: அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் போருக்கு வடகொரிய மக்கள் தயார்!

அந்த வீடியோவில்,"லா டூர்ட்டா தனது சக ஊழியரான அலெக்ஸுடன் ஆலோசனை நடத்தும்போது, பாதிக்கப்பட்ட அந்த நபர் கேமராவுக்கு முதுகை மட்டும்  காண்பித்து நின்றுகொண்டிருப்பதை கிளிப் காட்டுகிறது. ரப்பர் கையுறைகளுடன் அந்த பூட்ட பரிசோதித்தபோது, ​​பூட்டு துருப்பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வருகிறார்கள், அதை அகற்றுவது இன்னும் சிக்கலானது.

இது ஒரு விளையாட்டு

உதவியாளர் அலெக்ஸ் , "இது மிகவும் துருப்பிடித்துள்ளது. நிச்சயமாக, நீங்கள் அதைக் கொண்டு குளித்திருக்கிறீர்கள், இல்லையா?" என அந்த நபரிடம் கேள்வியெழுப்புகிறார். சிறிது போராடி அந்த பூட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பூட்டை எப்படி அகற்றினார்கள் என்று கேட்டால் இன்னும் அதிர்ச்சியளிக்கும்.  

இதுகுறித்து லா டூர்ட்டா கூறுகையில்,"அவரது முந்தைய உறவில், ஒரு விளையாட்டு விளையாடி உள்ளார். அவர்களில் ஒருவர் பூட்டைப் போடுவார், மற்றவர் சாவியை வைத்திருப்பார். இதுதான் அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், அவர்களின் உறவு சரியாக செல்லவில்லை

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சம்பவங்களை நான் பார்க்கிறேன். மக்கள் கேட்கிறார்கள், ஏன் இப்படி அணிந்திருக்கிறார்களே?  துரதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஸ்டுடியோவில் பார்க்கிறோம்.

இறுதியில் தனது முன்னாள் காதலியிடம் இருந்து சாவியை மீட்டெடுத்ததாக அந்த நபர் கூறினார், ஆனால் அதற்குள் பூட்டு துருப்பிடித்துவிட்டது. பூட்டு நீண்ட காலமாக ஆணுறுப்பை சுற்றி இருந்தது, அதன் ஒரு பகுதி துருப்பிடித்திருந்தது. அந்த சாவி முழுமையாக உள்ளே செல்லவில்லை, எனவே சரியாக சுற்றி திறக்கவில்லை. மிகக் கவனமாக, நாங்கள் சாவியை அதன் இடத்தில் வைத்து, அதை ஒரு சுத்தியலால் இரண்டு அடிகள் அடித்தோம். அது பின்னர் பூட்டு வந்துவிட்டது" என்றார். இந்த வீடியோ டிக்டோக்கில் 2.2 மில்லியன் பார்வைகள் மற்றும் 1,650 கருத்துகளுடன் வைரலானது. 

மேலும் படிக்க | போரால் தொடரும் உயிரிழப்புகள்! ரஷ்யாவின் அண்மை தாக்குதலில் நால்வர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News