ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம் போட்ட பிரபல பாடகி கைது!!

ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு நடனம் ஆடியதால் பிரபல பாப் பாடகி கிரே நிக்கோல் கைது செய்யப்பட்டுள்ளார்! 

Last Updated : Jul 29, 2018, 12:29 PM IST
ஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம் போட்ட பிரபல பாடகி கைது!! title=

ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு நடனம் ஆடியதால் பிரபல பாப் பாடகி கிரே நிக்கோல் கைது செய்யப்பட்டுள்ளார்! 

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல். இவர் தனது தோழியுடன் பிரான்ஸ்க்கு சுற்றுலா சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு சென்ற அவர்கள் சந்தோசத்தில் சாலையின் நடுவே துள்ளிகுதித்து நடனமாடியுள்ளனர். 

இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல இருவரும் தங்களது நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சியை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். 

 

The location doesn’t matter! #Part2 #Crazy #Girls #Paris

A post shared by Gery-Nikol (@gerynikol) on

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை கடுமையாக திட்டியுள்ளனர். சிலர் விளையாட்டுத்தனமாக செய்துள்ளனர் என ஆதரவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News