ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மிக் ரக போர் விமானங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய விமானப்படையிலும் அந்த ரக போர் விமானங்கள் அதிகம் இருக்கின்றன.
இந்தச் சூழலில், சீனாவின் செங்டு ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (சிஏசி) மிக்-21 விமானத்துடைய வடிவமைப்பின் அடிப்படையில் ஜே-7 ஒற்றை எஞ்சின் கொண்ட இலகுரக போர் விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. ஆனால் இது உண்மையான விமானம் இல்லை. ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம் ஆகும்
இந்த விமானங்களானது சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பொம்மை விமானங்களை வெளிநாடுகளுக்கு அதிகமாக அனுப்ப வேண்டுமென சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக் மட்டுமின்றி சுகோய் ரக போர் விமானங்களைப் போலவும் சீனாவில் பொம்மை விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ரிமோட்-கண்ட்ரோல்டு பொம்மைகளின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவரான Zhejiang Zhiyang Shiye Ltd இன் விற்பனை மேலாளர் வாங் சென் கூறுகையில், ‘இந்த விமானங்களுக்கான சர்வதேச ஆர்டர்கள் கடந்த வருடம் முதல் அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து 20 முதல் 30%வரை ஆர்டர்கள் வருகின்றன’ என்றார்.
மேலும் படிக்க | Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி
ரஷ்யா தயாரிப்பு விமானங்களுடனான சீனாவின் தொடர்பு பல தசாப்தங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும்கூட, சீன விமானப்படையில் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக சுகோய் சு-30 தவிர, ரஷ்ய கனரக சுகோய் சு-35 ஃபிளாங்கரும் இடம்பெற்றிருக்கிறது.
உக்ரைனுடனான போரால் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் மத்தியில் நெருக்கடி உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியமானது, ரஷ்யாவுக்கு விமானம் மற்றும் கூறுகளை விற்பனை செய்வதற்கும் வழங்குவதற்கும் தடை விதித்திருக்கும் சூழலில் சீன நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு விமான பாகங்களை வழங்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.
அதுமட்டுமின்றி, மாஸ்கோவிற்கான சீன தூதர் ஜாங் ஹன்ஹுய், ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக நிறுவனமான TASS இடம் பேசுகையில், “ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு விமானங்களுக்கான கூறுகளை வழங்க சீனா தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி அதற்கான ஒத்துழைப்பை ஒழுங்கமைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதுதொடர்பாக சில விமான நிறுவனங்கள் எங்களுடன் பேசுகின்றன. இதற்காக எங்களிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை," என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | Sri Lankan Crisis: அரசு அலுவலங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுகிறது: இலங்கை அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR