Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி

நெட்ஃபிக்ஸ் தொடரான ​​`The Chosen One` வலைதளத் தொடரில் பணியாற்றும் இருவரை பலி வாங்கிய விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2022, 07:08 PM IST
  • `The Chosen One` வலைதளத் தொடர் நடிகர்கள் இருவர் விபத்தில் பலி
  • வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம்
  • நெட்ஃபிக்ஸ் தொடர் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
Netflix The Chosen One: மெக்சிகோ வேன் விபத்தில் பிரபல நடிகர்கள் இருவர் பலி title=

நெட்ஃபிக்ஸ் வெப்சீரிஸ் தொடரில் நடித்த இரண்டு நடிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். நெட்ஃபிக்ஸ் தொடரான ​​`The Chosen One` வலைதளத் தொடரில் பணியாற்றி வந்த இருவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர். 

படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் விபத்து நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்திற்கு உள்ளான வேன் சாண்டா ரோசாலியாவிலிருந்து உள்ளூர் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது.

இந்த விபத்தில் சிக்கிய ரேமுண்டோ கார்டுவோ குரூஸ் மற்றும் ஜுவான் பிரான்சிஸ்கோ கோன்சலஸ் அகுய்லர் (Raymundo Garduo Cruz and Juan Francisco Gonzalez Aguilar) ஆகிய நடிகர்கள் இருவர் இறந்துவிட்டதாக பாஜா கலிபோர்னியா கலாச்சாரத் துறை (Baja California Department of Culture) தெரிவித்துள்ளது.

பாஜா கலிபோர்னியா சுர் தீபகற்பத்தில் முலேஜ் அருகே அவர்களது வேன் விபத்துக்குள்ளானது. விபத்து ஜூன் 16 அன்று நடந்தது, மேலும் பாலைவனப் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் கவிழ்ந்தது என தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | OTT வலைதளங்களில் க்ரிப்டோ க்ரைம் டாக்குமெண்ட்ரிகள்

நெட்ஃப்ளிக்ஸின் வலைதளத் தொடருக்காக (Netflilx Web Series) படக்குழுவினர் அருகில் உள்ள சாண்டா ரோசாலியா பகுதியில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

வலைதளத் தொடரின் படபிடிப்புக் குழுவினரில் இருவர் இறந்ததாகவும் காயமடைந்த ஆறு பேரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் (The Hollywood Reporter) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | சூப்பர் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Tecno Pova ஸ்மார்ட்போன்

விபத்தை அடுத்து, ​​`The Chosen One` வலைதளத் தொடரின் தயாரிப்பு நிறுவனமான ரெட்ரம், தற்காலிகமாக படபிடிப்பை நிறுத்தியுள்ளது.

12 வயது சிறுவன், தான் இயேசு கிறிஸ்துவின் அவதாரம் என்றும், மனித குலத்தைக் காப்பாற்ற விதிக்கப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. மார்க் மில்லர் மற்றும் பீட்டர் கிராஸ் ஆகியோரின் காமிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸ் இது.

இந்த விபத்து செய்தி பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி இந்த பிளான் ரீசார்ஜ் செய்ய முடியாது; Airtel அதிரடி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News