கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 133 அனைவரும் உயிரிழந்தனர். விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் வமலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியதில் பெரும் தீயை ஏற்படுத்தியது.
இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது குறித்து தற்போது புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முன்னதாக, விபத்து நேரிட்ட உடனேயே, விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, அது செங்குத்தாக விழாது என்றும், அதற்கு மிதக்கும் திறன் உண்டு எனவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக விபத்துக்குள்ளானதா என்று புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கான ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போயிங் 737-800 விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து விமானத் தரவுகள் காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை கூறியது. அமெரிக்க அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையில் நன்கு அறிந்த ஆதாரங்களை அது மேற்கோளிட்டுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்து இதுவாகும். வேகமாக தரையிறங்கும் போது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அருகிலுள்ள விமானங்களிலிருந்து பலமுறை அழைப்பு விடுத்தும் விமானிகள் பதிலளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து வேண்டுமென்றே தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் செயலா என்பதைத் உறுதிபடுத்த புலனாய்வாளர்கள் ஆதாரங்களைத் தேடுவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 21 அன்று, குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு சென்று கொண்டிருந்த போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் போது திடீரென கீழே விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 123 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் பலியாகினர்.
மேலும் படிக்க | China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியுஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR