ஜப்பானில், இட்டாஷா என்பது அனிமேஷன், வீடியோ கேம்களின் குறிப்பாக பிஷோஜோ கேம்கள் அல்லது ஈரோஜ் உட்பட பல கற்பனை கதாபாத்திரங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஆகும். இந்த அலங்காரங்களில் பொதுவாக பெயிண்ட் ஸ்கீம்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டோக்கியோ, ஒசாகா அல்லது நகோயா போன்ற இடங்களில் அல்லது ஒடைபா இடாஷா டெங்கோகு போன்ற இடாஷா சார்ந்த நிகழ்வுகளில் இந்த கார்களை மக்கள் கண்டு களிக்கின்றன.
டோக்கியோவில் 1,000 வாகனங்கள் வரை இடம்பெறும் வருடாந்தர நிகழ்ச்சியான இடாஷா டெங்கோகு போன்ற நிகழ்வுகளுக்கும் உரிமையாளர்கள் ஒன்று கூடுகின்றனர்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கார்கள், காஸ்ப்ளே உடையணிந்து வரும் பார்வையாளர்களின் நியான் விக்கள் மற்றும் அயல்நாட்டு ஆடைகளை கூட உயர்த்தி, வண்ணம் என வித்தியாசமான கற்பனையின் கலவையாக உள்ளன.
தனது "இட்டாஷா" காரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இந்த கார்களின் உரிமையாளர்கள் கவலைப்படுவதில்லை, இதில் கலந்துக் கொண்டுள்ள கார்களின் உரிமையாளர்களுக்கும், கார்ட்டூன் படங்களை தங்கள் வாகனங்கள் முழுவதும் பூசுவது மிகவும் பிடித்தமானதாக இருக்கிரது.
"இடாஷா" என்றால் "பயமுறுத்தும் கார்" என்றும் பொருள் கொள்ளலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளில் முதன்முதலில் தோன்றத் தொடங்கியபோது அந்த வாகனங்களின் பொருத்தமற்ற படத்தைப் பிரதிபலிப்பதாக தோன்றியது.
மேலும் படிக்க | Maruti Suzuki Car Price: மாருதி நிறுவனம் அளித்த ஷாக், கார்களின் விலை உயர்ந்தது
ஆனால் அனிம் மற்றும் பிற பொழுதுபோக்கு கலாச்சாரங்கள் ஜப்பானில் வரவேற்பைப் பெற தொடங்கியபின், இந்த கார்கள் வித்தியாசமாக பார்க்கப்படுவதில்லை.
இட்டாஷா உரிமையாளர்கள் தங்கள் கார்கள், மோட்டார் பைக்குகள் அல்லது கேரவன்களை கூட கேன்வாஸாக மாற்றி, பெரிய வினைல் ஸ்டிக்கர்கள் மூலம் தங்கள் வாகனங்களை மாற்றியமைக்க பெருமளவில் செலவு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான டாலர்களை செலவானாலும், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
பல வாகனங்களில், தனிப்பயனாக்கப்பட்ட பிரேம்கள், சக்கரங்கள், என்ஜின்கள் மற்றும் உட்புறங்களில் தாங்கள் விரும்பிய கலைப்படைப்புகளைச் சேர்ப்பதற்கு பெரும் தொகைகள் செலவாகும்.
கார்கள் மற்றும் அனிமேஷனில் ஆர்வமுள்ள இளைஞர்களிடையே இயற்கையாகவே கலாச்சாரம் வளர்ந்தது என்று இட்டாஷா நிகழ்வு அமைப்பாளர் கெனிச்சி கவாஹாரா தெரிவிக்கிறார். அவர் இட்டாஷா ஆர்வலர்களுக்காக ஒரு பத்திரிகையை வெளியிடுகிறார்.
"99 சதவிகிதத்திற்கும் அதிகமான" உரிமையாளர்கள் ஆண்கள், அவர்கள் "தங்கள் விரும்பும் விஷயங்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த" இட்டாஷாவைப் பயன்படுத்துகின்றனர், என்றார்.
இன்று இங்கு 1,000 இட்டாஷா உள்ளன, எந்தவொரு காரும் ஒன்றுபோல இல்லை என்பது ஒவ்வொருவரின் விருப்பமும் மாறுபடுகிறது என்பதை காட்டுவதாக அவர் கூறுகிறார்.
சில உரிமையாளர்கள் தங்கள் டிசைன்களை பிரிண்டிங் நிறுவனத்திற்கு அனுப்பி பிரிண்ட் செய்து பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் கார்களை இதற்காகவே பிரத்யேகமாக உள்ள சிறப்பு கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ