ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்: 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2019, 06:48 PM IST
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்: 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை title=

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் நேற்று அறிவிக்கபட்டார். 54 வயதாகும் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் ரூ. 10.70 கோடி (15 லட்சம் டாலர்) நன்கொடையாக பெற்றுள்ளார். இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் நன்கொடைகள் வழங்கியுள்ளனர். அவருக்கு வரும் நாட்களில் இன்னும் அதிகமான நன்கொடைகள் கிடைக்கும் எனவும் ஜனநாயக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் 24 மணி நேரத்துக்குள் அதிக நிதியை திரட்டியது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் எனக் கூறப்படுகிறது.  

ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் பெண்ணாக இவர் தான். 54 வயதாகும் கமலா ஹாரிஸ் அதிபர் டொனால்டு டிரம்பை மிகவும் தீவிரமாக விமர்சிப்பவர். கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending News