Life insurance policy எடுத்த தாலிபன் தீவிரவாதி பற்றி தெரியுமா?

Life insurance policy எடுக்க பல்வேறு ஆவணங்கள் தேவை. ஆனால் ஆப்கனின்  தாலிபன் தீவிரவாதி காப்பீட்டு பாலிசி எடுத்தார்...  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 10:28 PM IST
  • காப்பீட்டு பாலிசி எடுத்த தீவிரவாதி
  • தீவிரவாதிகள் எப்படி பாலிசி எடுக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி
  • இறந்து போன தீவிரவாதியின் பாலிசித் தொகை யாருக்கு கிடைக்கும்?
Life insurance policy எடுத்த  தாலிபன் தீவிரவாதி பற்றி தெரியுமா? title=
தலிபான் பயங்கரவாதி ஒருவர் 'ஆயுள் காப்பீட்டு பாலிசி' (Life insurance policy) வாங்கியிருந்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விஷயம். எப்படி ஒரு தீவிரவாதி ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்க முடியும் என்று திகைப்பாக இருக்கிறதா?
 
எதுவும் சாத்தியமில்லாத ஒரு வினோதமான உலகம் (World) இது. 2020 ஆம் ஆண்டில் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று உலகையே ஆட்டிவைக்கும் என்று கடந்த ஆண்டு யாராவது நம்மிடம் கூறியிருந்தால், அதை நம்பியிருக்க மாட்டோம். ஆனால் கொரோனா வைரஸ் (Coronavirus) அதைச் செய்தது. இந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளதைப் பார்க்கும்போது, ​​ஒரு தலிபான் பயங்கரவாதிக்கு 'ஆயுள் காப்பீட்டு பாலிசி' இருப்பதாக நம்புவது கடினம் அல்ல
 
முல்லா அக்தர் மன்சூர் (Mullah Akhtar Mansour) என்ற தீவிரவாதி 2016ஆம் ஆண்டில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தானில் (Pakistan) உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 'ஆயுள் காப்பீட்டு' பாலிசியை வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது.
 
 
மன்சூர் மற்றும் அவரது தலைமறைவான கூட்டாளிகளுக்கு எதிரான பயங்கரவாத நிதி வழக்கு விசாரணையின் போது சுவாரஸ்யமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. கராச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனத்திடம் விசாரணை செய்தது. காப்பீட்டுக் பாலிசையை (Insurance Policy) தலிபன் பயங்கரவாதி ஒருவர் வாங்கியிருப்பது இந்த விசாரணையில் தெரியவந்தது. பெடரல் புலனாய்வு அமைப்பு (Federal Investigation Agency) தாக்கல் செய்த வழக்கின் விசாரணையில் கடந்த ஆண்டு இந்த விஷயம் வெளியானது. 
 
முல்லா அக்தர் மன்சூர் (Mullah Akhtar Mansour) போலி அடையாளத்தைக் கொடுத்து ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வாங்கினார். 2016 மே மாதம் 21ஆம் தேதியன்று மன்சூர் இறப்பதற்கு முன், ஐ.ஜி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் பாகிஸ்தான்-க்கு (IGI General Insurance Limited Pakistani) 3,00,000 ரூபாயை செலுத்தியதாகத் தெரிகிறது.
 
அரசாங்க கருவூலத்தில் டெபாசிட் செய்வதற்காக 300,000 காசோலையை, காப்பீட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இருப்பினும், எஃப்ஐஏ (FIA) புலனாய்வாளர்கள், அசல் தொகையை பிரீமியத்துடன் செலுத்துமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தினர். எனவே, முழுத் தொகையும் கருவூலத்தில் (treasury) டெபாசிட் செய்யப்படும்.
 
 
ஆப்கானிஸ்தான் தலிபன் தலைவர் மற்றும் / அல்லது அவரது கூட்டாளிகளால் பெறப்பட்ட மற்றும் இயக்கப்படும் கணக்குகள் குறித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி அலைட் வங்கி லிமிடெட் (Allied Bank Ltd) மற்றும் அல்-ஃபாலா (Al-Falah) வங்கி என இரு தனியார் வங்கிகளிடமிருந்தும் அறிக்கைகளைக் கோரினார்.
 
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News