"ஈரானின் உச்ச தலைவர்கள்" நிதானமாக பேசுங்கள் -எச்சரித்த டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது வார்த்தைகள் குறித்து கவனமாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2020, 08:09 AM IST
"ஈரானின் உச்ச தலைவர்கள்" நிதானமாக பேசுங்கள் -எச்சரித்த டொனால்ட் டிரம்ப் title=

வாஷிங்டன்: ஈரானின் (Iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமானிக்கு அவரது வார்த்தைகள் குறித்து கவனமாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறித்த அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) கருத்துக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா குறித்து மிகவும் தெளிவற்ற கருத்துக்களை பேசியதாக எச்சரிக்கையுடன் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, அவர்களின் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் வார்த்தைகளைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

 

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது அறிக்கையில், அமெரிக்காவை தீயவர்களாகவும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை அமெரிக்காவின் ஊழியர்கள் என்றும் வர்ணித்துள்ளார். இது தவறானது என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானிய தலைவர்களிடம் வேண்டுகோள்:
இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்த டிரம்ப் ஈரானிய தலைவரை எச்சரித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், அமெரிக்காவை நேசிக்கும் ஈரான் மக்கள், தங்கள் கனவுகளை நிறைவேற்ற ஆர்வமுள்ள ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார்கள். அவர்களைக் கொல்லும் அரசை அல்ல என்று கூறியுள்ளார். மேலும் ஈரானிய தலைவர்களிடம் பயங்கரவாதத்தை கைவிட்டு, தங்கள் நாட்டை அழிப்பதற்கு பதிலாக ஈரானை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து பேசிய கம்னாய்:
ஜனவரி 17 அன்று, ஈரானின் உச்ச தலைவர் கமேனி பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறிவைத்து ட்வீட் செய்தார். அவர் தனது ட்விட்டில், "ஈரான் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் தீய பிரிட்டிஷ் அரசாங்கங்களின் அச்சுறுத்தலால், அவர்கள் அமெரிக்காவின் ஊழியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. எங்களுக்கு எதிரான போரில் இந்த மூன்று நாடுகளும் சதாமுக்கு எல்லா வழிகளிலும் உதவியுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News