ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு!
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று காலை சுமார் 8.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake measuring 5.6 on the Richter scale hit Japan's Hokkaido: USGS
— ANI (@ANI) October 26, 2018
ANI தகவலின் படி, இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.