எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி? - இன்றும் ஆயிரக்கணக்காணோர் பணிநீக்கம்!

ட்விட்டரின் ஒப்பந்த பணியாளர்களில் ஆயிரக்கணக்கானோரை அந்நிறுவனம் இன்றும் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2022, 01:53 PM IST
  • ட்விட்டர் நிறுவனம் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
  • எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி? - இன்றும் ஆயிரக்கணக்காணோர் பணிநீக்கம்! title=

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் (Blue Tick) நடைமுறை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதற்கு எட்டு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் முடுக்கிவிட்டார். இதனால், கடந்த நவ.4ஆம் தேதி அன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்தனர். 

44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில், நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதன் காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  அதுமட்டுமின்றி, 'கடினமான உழைப்பவர்களுக்கு, ஜெயிக்க நினைப்பவர்களுக்கு ட்விட்டர் சிறப்பான இடம், ஆனால், அப்படியில்லாதவர்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ட்விட்டர் உங்களுக்கான இடமில்லை' என தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | Istanbul Bomb Blast Video : துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு ; 6 பேர் பலி

இதனால், அவரின் அதிரடிகள் தொடருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் இன்றும் ஒரு புதிய அதிர்ச்சியை ட்விட்டர் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார். அதாவது, ட்விட்டரில் பணியாற்றி வந்த 4,400 ஒப்பந்த பணியாளர்களை எவ்வித அறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ட்விட்டர் பயனாளர் கேசி நியூட்டன் என்பவர்,"ஒப்பந்த பணியாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. திடீரென அவர்களின் பணிசார்ந்த இமெயில்கள் போன்றவற்றை அவர்களால் பயன்படுத்த முடியாமல் போயுள்ளது. மேலாளர்களுக்கும், தங்களின் கீழ் பணிப்புரிந்தவர்கள் திடீரென பணியமைப்பில் (System) இருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேல் அதிகாரிகளும் இதுகுறித்து எதையும் கூறவில்லை" என ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து, எலான் மஸ்க் தரப்பில் இருந்தோ, ட்விட்டர் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வோர் தரப்பில் இருந்தோ எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பயன்பாட்டு வசதிகளுக்குள்ளும் உள்நுழைய முடியாத பின்னரே, தாங்கள் வேலை இழந்ததை அவர்கள் அறிந்துள்ளனர். 

முன்னதாக, ட்விட்டரில் பணிபுரிந்து வந்த மொத்தம் 7,000 பணியாளர்களில் சுமார் 50 சதவிதத்திற்கும் அதிகமானோரை கடந்த நவ. 4ஆம் தேதி அந்நிறுவனம் பணியைவிட்டு நீக்கியது. அதாவது, 3,800 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டது. 

மேலும் படிக்க | எலான் மஸ்க் சொன்ன ஒரே வார்த்தை... பணியாளர் ஒரே வாந்தி - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News