கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Georgia Supreme Court reinstated ban on abortion: ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2022, 09:46 AM IST
  • கருக்கலைப்புத் தடைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள்
  • பெண்களுக்கு 1973ஆம் ஆண்டு கிடைத்த உரிமை பறிப்பு
  • ஜார்ஜியா உச்ச நீதிமன்ற தீர்ப்பு
கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு title=

ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த வாரம் கீழமை நீதிமன்றத்தால் தடுக்கப்பட்ட சட்டத்தை ஜார்ஜியா உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக மீட்டெடுத்துள்ளது. ஜார்ஜியா அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அவசரத் தடைக்கான கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மாகண உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிபதி ராபர்ட் சி.ஐ. ஃபுல்டன் அளித்த கவுண்டி உயர் நீதிமன்றத்தின் மெக்பர்னி சட்டத்தை இடைநீக்கம் செய்கிறது. 2019 ஆம் ஆண்டில் மாகண சட்டமன்றம் ஒப்புதல் அளித்தபோது, ஆறு வார தடை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பதால் தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இது, கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையாகும். கர்ப்பத்தின் ஆறு வாரங்களுக்குப் பிறகு தடை என்பது,பெரும்பாலான பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை இன்னும் உணராத காலம் என்பதை கருத்தில் கொண்டு இது ஒரு இறுதி முடிவு அல்ல என்ற வாதங்கள் பெரும்பாலான பொதுமக்களால் முன்வைக்கப்படுகிறது. நீதிபதி மெக்பர்னியின் தீர்ப்பின் மீதான அட்டர்னி ஜெனரலின் மேல்முறையீட்டை மாகண உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் போது அது ஆறு வார கர்பத்தை கலைக்க தடை செய்யும் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

“இன்றைய நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எவ்வாறாயினும், மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் எங்களால் மேலதிக கருத்தை வழங்க முடியவில்லை, ”என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் காரா ரிச்சர்ட்சன் கூறினார்.

மேலும் படிக்க | அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு

கருக்கலைப்பு வழங்குநர்கள் மற்றும் கருக்கலைப்பு உரிமை வழக்கறிஞர்களின் கோரிக்கையை மாகண உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என பொதுமக்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.. "கருக்கலைப்பு என்பது, உடல்நலப் பாதுகாப்புக்கு சமம்" மற்றும் "நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம்" என்ற பாதாகைகளுடன் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். 

1973ஆம் ஆண்டு நடைபெற்றா மைல்கல் ரோ Vs வேட் வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கும் உரிமை அமெரிக்க அரசியலமைப்புக்கு உட்பட்டது என தீர்ப்பளித்தது. அதன்படி, அமெரிக்கப் பெண்கள், கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் கருவின் நான்காவது மாதத்தில் இருந்து கருக்கலைப்பு செய்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரு ஆறு வாரங்கள் வரை வளர்ந்துவிட்டால், கருக்கலைப்பு செய்து கொள்ளவே முடியாது அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூன் மாதம் ரோ Vs வேட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, மாற்றப்பட்டதை அடுத்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  

மேலும் படிக்க |13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்... கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News