புதுதில்லி: பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள்கள் மக்கள் வாழ மிகச் சிறந்த இடம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாசாவின் இந்த அரிய கண்டிப்பிடிப்பை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிற்பபு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Notice the new @GoogleDoodles? It's about the 7 Earth-sized planets we discovered around nearby star! Get the news: https://t.co/G9tW3cJMnV pic.twitter.com/dOHB0bLqXn
— NASA (@NASA) February 23, 2017