இந்தியாவின் முதல் பெண் வக்கீல் கார்னிலியா சொராப்ஜியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மெக்சிகன்-அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கு அடையாளமாக விளங்கிய செலினா குவிண்டனிலா அவர்களை நினைவுகூறும் வகையில் கூகிள் சிறப்பு டூடில் ஒன்றினை வெளியிட்டுள்ளது!
தேஜனோ இசை ராணி என அழைக்கப்படும் செலினா ஏப்ரல் 16, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
தேஜனோ இசை கலையில் பெயர் பெற்ற முதல் பெண் பாடகியாகவும், பிரபலமான பாடகியாகவும் விளங்கியவர் செலினா குவிண்டனிலா.
இசை உலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக விளங்கிய நிலையில் தனது திறமையினால் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர்.
வெளியிட்டுள்ளது.!
உலகின் அறியப்படாத நிலப்பகுதிகளை நன்ஸன் ஆராய்ந்து, புதிய நிலத்தோற்றம் உள்ளது என்பதை உலகுக்கு எடுத்துறைத்தவர்.
1861-ஆம் ஆண்டு நார்வேயின் ஒஸ்லோவில் நன்ஸனின் பிறந்தார். இளம் வயதிலேயே சாகச உணர்வைப் பெற்ற இவர், குறைந்த அளவிலான பொருட்களை 50 மைல் தூரத்திற்கு ஒரே நாளில் எடுத்து பயனித்து செல்லும் திறன் பெற்றவர்.
உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகிள் நிறுவனத்தின் 19-வது பிறந்தநாள் இன்று
அந்த வகையில் நம்மை உற்சாகப்படுத்தும் வகையில், கூகிள் டூடுளில் விதவிதமான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.
கூகிள் இணையதள தேடுதலில் சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று கூகிளுக்கு 19-வது பிறந்தநாளில் கூகிள் டூடுளில் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுளை வெளியிட்டுள்ளது. கூகிள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.
இணையத்தின் தேடல் ஜாம்பவானான கூகிள் இன்று தனது சிறப்பு ஊடாடும் டூடில் மூலம் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சனின் 308-வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது.
சாமுவேல் ஜான்சன், செப்டம்பர் 18, 1709-ஆம் ஆண்டு புத்தக வியாபாரியின் மகனாக இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். இன்று உலகமே பயன்படுத்தும் அகாரதியினை வடிவமைத்த பெருமைக்குறியவர் இவர் தான். எனவே இவர் ‘அகராதியின் தந்தை’ என அழைக்கப்படுகின்றார்.
இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் சிறப்பு தினத்தை கொண்டாடும் விதமாக் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1888-ம் ஆண்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் உள்ள கூகுள் டூடுலில் இந்திய சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளது.
விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 71-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுலில் இந்திய தேசியப் பறவையான மயில் இருபுறமும் வீற்றிருக்க, அதற்க்கு நடுவில் அசோகச் சக்கரமும், மேலே பாராளுமன்றம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.
இணையத்தின் தேடல் ஜாம்பவானான கூகிள் இன்று சிறப்பு ஊடாடும் டூடில் மூலம் தனது ஹிப் ஹாப் வரலாற்றினை கொண்டாடிவருகிறது.
டி.ஜே. கூல் ஹெர்க் என்று பலராலும் அறியப்படும் கிளைவ் காம்ப்பெல் அவர்களின் நியூயார்க் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் 44வது ஆண்டு விழாவினை நினைவு கூறும் வகையில் இன்று கூகிள் தனது தேடல் தளத்தில் சிறப்பு ஊடாடும் டூடிலினை கட்சிப்படுதியுள்ளது.
காட்சி கலைஞர் சே ஆட்மஸ் மற்றும் படைப்பாற்றல் இயக்குனர் டிஃப் ஜாம் ஆகியோர் இந்த டூடில் லோகோ படத்தை வடிவமைத்துள்ளார்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு வரவேற்றுள்ளது.
இந்த டூடுள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பந்து வீசுவது போன்றும் அதனை பேட்ஸ்மேன் அடிப்பதும், பீல்டர்கள் அதனை பிடிக்க முயல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.