சினாயில் தீவிரவாதிகள் மீது அரசுப் படைகள் தாக்குதல்- 28 பலி

Last Updated : Jul 22, 2017, 03:55 PM IST
சினாயில் தீவிரவாதிகள் மீது அரசுப் படைகள் தாக்குதல்- 28 பலி title=

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பல பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறையாக மாறியுள்ளது. 

குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சிமாய் தீபகற்பம் பகுதியில் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் 28  அதிபயங்கர தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Trending News