கணவன் தேவை... நடுரோட்டில் நின்று இளம்பெண் செய்யும் வினோத காரியம்!

Bizarre News: தனக்கு ஒரு கணவன் தேவை என ஒரு பெண்மணி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலையில் போர்டுடன் நின்ற சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 12, 2023, 04:08 PM IST
  • டேட்டிங் ஆப் இரண்டு வருடங்கள் தேடியும் தனிமையில் இருந்துள்ளார்.
  • இனி டேட்டிங் ஆப் பக்கம் போகப்போவதில்லை என அந்த பெண் முடிவு.
  • அந்த வீடியோவுக்கு பின் ஒருவருடன் பழகி வருவதாகவும் தெரிவித்தார்.
கணவன் தேவை... நடுரோட்டில் நின்று இளம்பெண் செய்யும் வினோத காரியம்! title=

Bizarre News: இன்றைய இணைய யுகத்தில் சிங்கிளாக சுத்துவதை விட கமிடட்டாக சுத்துவதை தான் பெரும்பாலான இளம் தலைமுறையினர் விரும்புவதாக தெரிகிறது. படத்திற்கு போவதில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் கான்சர்ட் போவது வரை அனைத்திற்கும் தனக்கு ஜோடி தேவை என்பதை அவர்களின் அத்தியாவசிய தேவை. 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா' என 2003ஆம் ஆண்டில் பாய்ஸ் படத்திலேயே பாட்டு வைத்தாலும், 2023ஆம் ஆண்டிலும் அது இன்றைய இளைஞர்களுக்கு பொருந்திப்போகும் பாடலாகவே உள்ளது. 

பள்ளி, டியூஷன், பஸ் ஸ்டாண்ட், கல்லூரி, ரயில் பயணம் என இன்றைய இளைஞர்கள் காதலை எங்கும் தேடிய படி தான் இருக்கின்றனர். இதெல்லாம் பதின்ம வயதில் இயல்பானது தான். இருப்பினும், இவர்கள் சற்று வளர்ந்து அதாவது இணைய உலகம் குறிப்பிடும் 90s கிட்ஸ் வயதை எட்டும்போது தான் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மிகத் தீவிரமாக இறங்குகின்றனர். 

வீட்டின் மூலம் திருமணம் நடைபெற வேண்டும் என நினைப்பவர்கள் மேட்ரிமோனியிலும், காதலித்து தான் திருமணம் செய்வோம் என பிடிவாதம் பிடிப்பவர்கள் பல்வேறு டேட்டிங் ஆப்பிலும் தங்களின் சுய விவரங்களை பதிவு செய்து இணையரை தேட ஆரம்பிக்கின்றனர். டேட்டிங் ஆப் கலாச்சாரம் தற்காலிக டேட்டிங்கிற்கு தான் அதிகம் என்றாலும் அது காதல், திருமணம் வரை அரிதினும் அரிது என்கிறார்கள் இளசுகள். அந்த வகையில், அமெரிக்காவில் ஒரு இணையவெளி பிரபலமாக அறியப்படும் பெண்மணி தனக்கான இணையரை தேடிய நிகழ்வு சற்று சுவாரஸ்யமானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்தது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதுகுறித்து அவர் பதிவேற்றிய வீடியோவும் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த கரோலினா கீட்ஸ் என்ற அந்த பெண் ஒரு அட்டை போர்டின் உதவியுடன் தனக்கான கணவனைத் தேடுகிறார். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தனிமையில் இருந்து, பாரம்பரிய வழியில் துணையைத் தேடி, இந்த வழியை முயற்சிக்க நினைத்ததாக அவர் கூறியுள்ளார். அவர் அந்த அட்டை போர்டில், "எனக்கு ஒரு கணவனை தேடிகிறேன்" என்று எழுதி, மக்கள் கூட்டம் நிறைந்த சாலையோரம் நின்றபடி, அந்த போர்டுடன் நின்றார்.

மேலும் படிக்க | 1,180 கி.மீ ரயில் பயணம் செய்து ரஷ்ய அதிபரை சந்திக்கும் கிம் ஜாங் உன்... பதற்றத்தில் உலக நாடுகள்!

அதனை அனைவரும் பார்க்கும் வகையில் தலைக்கு மேல் தூக்கி காண்பித்துக்கொண்டு, சாலை முழுவதும் அலைந்து திரிந்தார். அந்த வீடியோவில் அவர் ஒரு ஸ்டைலான உடையை அணிந்திருப்பதைக் காணலாம் - பளிச்சென்ற நிற ஹால்டர்-நெக் க்ராப் டாப் மற்றும் ஜீன்ஸ் மற்றும் சன்கிளாஸ்ஸை அணிந்துள்ளார். அவரை கடந்து சென்று பல ஆண்கள் அந்த போர்டை பார்த்தார்கள். சிலர் அந்த பெண்ணை அணுகும் நோக்கத்துடன் இருந்தனர். 

கரோலினா கீட்ஸ் இன்ஸ்டாகிராமில் கிளிப்பை வெளியிட்டார். "எனக்கு ஒருவர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்," என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். கரோலினா கீட்ஸ் 29 வயதான மாடல் ஆவார். அவர் தனது சமூக ஊடக தளத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார். அவர் ஒரு நேர்காணலில், "பிரபஞ்சம் அதை (அந்த போர்டை) பார்க்கும் மற்றும் நான் விரும்புவதை எனக்கு அனுப்பும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து, "அந்த வீடியோவுக்குப் பிறகு நான் ஒருவருடன் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டேன், நாங்கள் கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரோலினா தனது அட்டை போர்டு முறை தகுதியானதாகவும் நிறைவானதாகவும் மாறக்கூடும் என்று நம்புகிறார்.

பல டேட்டிங் பயன்பாடுகள் மூலம் இரண்டு ஆண்டுகளாக தனக்கான இணையரை கண்டுபிடிக்கத் தவறிய பிறகும், அவர் காதலிக்க வேண்டும் என்ற உணர்வை மட்டும் கைவிடவில்லை. அவர் ஃபேஷன் மற்றும் மாடலிங்கில் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார்ய ஆனால் அவர் இன்னும் தனக்கு பொருத்தமான குணங்களை கொண்ட ஒரு மனிதனைத் தேடுகிறார். அவருடன் அவர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புகிறார்.

மேலும், கரோலினா இப்போதெல்லாம், டேட்டிங் செயலிகள் மூலம் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை என்று நம்புகிறார்; அவர்கள் அதை வேடிக்கைக்காகவும் நேரத்தை கடத்துவதற்காகவும் செய்கிறார்கள். கரோலினா அன்பையும் அர்ப்பணிப்பையும் நம்புகிறார், அதைத் தேடுகிறார்.

மேலும் படிக்க | இஸ்ரேல் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா தொடர்பான 15 நீதிபதி உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News