ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. ஹாங்காங் வரும் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த வருவார்கள். சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் இடமாக இருந்ததோடு, உள்ளூர் மக்கள் தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த உணவகத்தை கருதி வந்தனர்.
கொரோனா உலலெங்கிலும் சுற்றுலா துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டலும், இந்த பாதிப்பில் இருந்து தப்ப இயலவில்லை.
மேலும் படிக்க | தாய்லாந்து சுற்றுலா செல்ல திட்டமா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
ஜம்போ மிதவை ஹோட்டலும் கொரோனா காலத்தில் கடும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது. உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேலை இழந்தனர். பராமரிப்பு செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது ஜம்போ மிதவை கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
எனினும், இந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் 50 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த ஜம்போ ஹோட்டல் கடலில் மூழ்கியது உலகெங்கிலும் உள்ள பலரையும் சோகமடைய செய்துள்ளது.
ஜம்போ மிதக்கும் ஹோட்டல், தோற்றத்தில், சீன அரண்மனையை ஒத்திருந்தது. டாம் குரூஸ் மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணி போன்ற உலகளாவிய பிரபலங்களும் ஆளுமைகளும் அங்கு உணவருந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR