புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்

தன்னை கொலை செய்வதற்கு நடைபெறும் சதி குறித்தும், கொலை செய்ய திட்டமிட்டவர்களின் பெயரையும் இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 5, 2022, 11:53 AM IST
  • இம்ரான் கான் அரசை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார்.
  • அவரை 4 பேர் இணைந்து கொல்ல திட்டமிட்டள்ளதாக இம்ரான் தெரிவித்தார்.
  • இந்த சதி குறித்து தனக்கு முந்தைய நாளே தெரியும் என்றும் அவர் கூறினார்.
புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான் title=

Imran Khan assassination attempt : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று முன்தினம் மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. 

தாக்குதலில் இம்ரான் கானின் ஆதரவாளர் உயிரிழந்தார். மேலும், மொத்தம் 13 பேர் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர். மேலும் ஆட்டோமேடிக் ரைஃபிள் துப்பாக்கி வைத்திருந்த நபரை பொதுமக்களும், இம்ரான் கானின் ஆதாரவாளர்களும் அடித்தே கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது, இம்ரான் கானுக்கு காலில் கட்டுப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் மூவரும்தான் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ளார். தனது தலைமையில் மக்கள் ஒன்றிணைவதை ஒடுக்கவே மத பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். 

மேலும் படிக்க | முக்கிய தலைவர் சுட்டுக்கொலை... பஞ்சாபில் தொடரும் பயங்கரம் - முழு பின்னணி

மேலும், அவர் கூறியதாவது,"மத பயங்கரவாதம் என்ற பெயரில் என்னை கொலை செய்யப்பார்க்கின்றனர். என்னை மீதான தாக்குதலுக்கு முந்தைய நாளே, அதுகுறித்த தகவல் எனக்கு கிடைத்தது. வைசிராபாத் அல்லது குஜ்ரதில் என்னை கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்தது. 

முதலில் நான் மதத்தை நித்தனை செய்ததாக வாய்ஸ் டேப் வெளியிட்டார்கள். ஆளும் கட்சிகளில் ஒன்றான பிஎம்எல்என் அதை வாய்ஸ் டேப் போலியாக தயாரித்து பரப்பியது. எனக்கு தெரியும் அதை யார் செய்தது என்று, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதை கண்டிபிப்பது எளிது.  

தன்னை 4 பேர் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதில் 3 பேரின் பெயரை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார். மேலும், தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் சதி குறித்து முழுமையாக வீடியோ ஒன்றில் பேசி அதனை பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், தனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால் அது வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  தன்னை அழிக்கும் சதி ஒருபோதும் நிறைவேறாது எனவும் அழிந்தாலும் மீண்டும் முளைத்து எழுவேன் எனவும் கூறினார். 

இம்ரான் கான் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Imran Khan attack : இம்ரான் கானை சுட்டது ஏன்...? - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்; பாகிஸ்தானில் பதற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News