இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி

பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பு ஒன்றை வெளியிடுவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 13, 2022, 05:55 PM IST
  • ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது 38,000 வழக்குகள்
  • பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவிப்பு
  • புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய திட்டம்
இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி title=

பிரபல பன்னாட்டு மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பெரும்பாலும் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரித்து வருகிறது. பிறந்த குழந்தைகள் என்றாலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் தான் என்ற பேச்சு விளம்பரங்களில் மட்டுமில்லாமல் உலக மக்களில் மனதிலும் பதிந்து இருந்தது.

சுமார் 136 ஆண்டுகளாக போட்டி இல்லாத சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது  கடந்த சில ஆண்டுகளாக நுகர்வோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது சந்தையில் போட்டிக்கு பல்வேறு நிறுவனங்களும் களம் இறங்கிவிட்டனர்.

மேலும் படிக்க | வீடுதோறும் மூவர்ண கொடி; செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

இந்த நிலைக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் வந்ததற்கு காரணம் என்னவென்றால், அந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் வேதியல் பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுதான். உலக நாடுகளில் இருந்து சுமார் 38,000 வழக்குகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவத்தின் மீது தொடரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. குறிப்பாக அந்நிறுவனத்தின் டால்கம் பவுடர் மீதே நுகர்வோரின் குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தன.

இந்நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடரில் கேன்சரை வரவழைக்கும் ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கால்நார் வேதியல் பொருள் சேர்க்கப்படுகிறது  என நுகர்வோர் பலர் தெரிவித்தனர். இருப்பினும் நிறுவனம் சார்பாக இந்த கூற்றை மறுத்து பல முறை அறிவிப்புகளை வெளியிட்டும் இந்த புகைச்சல் நின்றபாடில்லை.

இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் பேபி பவுடர் தயாரிப்புகளை நிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன். மேலும், வரும் 2023 முதல் உளக அளவில் பேபி பவுடரின் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. 

J&J

இது குறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "2023 முதல் உலக அளவில் ஜான்சன் பேபி பவுடன் தயாரிப்பு மற்றும் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக சோள மாவை மையப்பொருளாகக் கொண்ட பேபி பவுடரை தயாரித்து வருகிறோம். உலகளவில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Independence Day: மூவர்ணக் கொடியில் ஜொலிக்கும் கோல்கொண்டா கோட்டை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News