நொடி பொழுதில் காருக்குள் புகுந்த சிறுத்தையிடம் இருந்த தப்பித்த இளைஞரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
பிரிட்டன் ஹேய்ஸ், தான்சான்யாவில் உள்ள செரங்கட்டி பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பகுதியில் வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில் சென்றபோது, திடீரென்று சிறுத்தைப் புலி ஒன்று அவர்களது காருக்குள் பாய்ந்து அமர்ந்தது.
ஹேய்ஸ்-க்கு மிக அருகில் சிறுத்தை வந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். அப்போது உடன்வந்திருந்த வழிகாட்டி, அசைவேண்டான் என எச்சரிக்க, அமைதி தகாத்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார் ஹேய்ஸ்.
My son waited until returning from the Serengeti to tell me a cheetah jumped in his Jeep during their photo #safari. And there's video!!! pic.twitter.com/Fbn8vS0AHb
— Elisa Jaffe (@ElisaJaffe) March 28, 2018
அவ்வழியாக வந்த மூன்று சிறுத்தைகளில் ஒன்று மட்டும் இவர்களின் கார் மீது ஏறியது. மற்றவை அந்த வழியாக சுற்றித்திரிந்துள்ளன. இந்த நிகழ்வின் முழுப் பகுதியினையும் ஹேய்ஸ் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார்.
பின்னர் இந்த காட்சிகளை இணையத்தில் பதிவேற்ற இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் சக்கைப்போடு போட்டு வருகிறது. தான்சான்யாவில் இதுபோன்ற சாகச பயணங்கள் வழக்கமான ஒன்றாகும். சுற்றுளாப் பயணிகள் அச்சம் இன்றி இன்றளவும் இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வரகின்றனர்.