சேவல் சண்டையில் தொடங்கிய மோதல்- 20 பேர் சுட்டுக் கொலை!

மெக்ஸிகோ நாட்டில் சேவல் சண்டையில் தொடங்கிய மோதல் தீவிரமடைந்து, பின்பு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 02:37 PM IST
  • கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை, கும்பல்களிடையே ஏற்பட்ட மோதல்களால் 3.4 லட்சம் பேர் உயிரிழப்பு.
  • மோதலின் உச்சமாக துப்பாக்கிச் சூடு நடந்ததில் 20 பேர் கொல்லப்பட்டனர், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேவல் சண்டையில் தொடங்கிய மோதல்- 20 பேர் சுட்டுக் கொலை! title=

மெக்ஸிகோ நாட்டில் வன்முறை, திருட்டு, போதை பொருள் கடத்தல் என பல்வேறு சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இரு குழுவினருக்குள் சண்டை என்பது அங்கு மிகச் சாதாரணமாக நடைபெறும் ஒன்று என கருதப்படுகிறது. பல்வேறு படங்களில் மெக்ஸிகோவின் உண்மை முகம் காட்டப்பட்டு வருகிறது. எனினும் அதன் வன்முறைகள் குறைந்தபடி இல்லை.

கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை, சட்டவிரோதமான கடத்தல் செயலில் ஈடுபடும் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதல்களால் 3.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

Mexico Massacre

மெக்ஸிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெக்ஸிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது இரு கும்பலுக்கிடையே மோதல் தொடங்கியுள்ளது. 

அப்போது மோதலின் உச்சமாக அங்கிருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது. 

CockFight

இந்த மோதலில், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் இறந்ததாக மெக்ஸிகோ மத்திய பொது பாதுகாப்பு துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு மத்திய புலனாய்வு குழு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News