பாகிஸ்தானுக்கு என்னதான் வேண்டும்? எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது

பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைகோடு (Line of Control) அருகே அமைதியின்மையை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என செய்திகள் வெளிவருகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 27, 2019, 07:16 PM IST
பாகிஸ்தானுக்கு என்னதான் வேண்டும்? எல்லையில் ஏராளமான துருப்புக்களை நிறுத்தியுள்ளது title=

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் உலகம் முழுவதும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லாததால், மிகுந்த வேதனையிலும், குழப்பத்திலும் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், பாகிஸ்தான் இப்போது கட்டுப்பாட்டு எல்லைகோடு (Line of Control) அருகே அமைதியின்மையை உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ஏராளமான துருப்புக்களை எல்லையில் நிறுத்தியுள்ளது. இதனுடன், குறுகிய தூர துப்பாக்கிகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் எழுப்பிய பின்னர், பாகிஸ்தான் (Pakistan) அனைத்து தரப்பிலும் தோல்வி அடைந்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அமைதியாக இருக்க விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என உலக நாடுகள் கூறி வருவதை பாகிஸ்தான் கேட்பதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை நோக்கியே செல்கிறது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் வரையும், இப்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் காஷ்மீர் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று (திங்களன்று) அவாமில் உரையாற்றியபோது, உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத்தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும் என்றும், அதை இந்தியாவும் நினைவில் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்தார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது இறுதி மூச்சு வரை போராடுவதாகவும், அதற்காக எந்த அளவிற்கும் செல்வோம் எனவும் இம்ரான் கான் கூறினார்.

கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தானால் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அதே சமயம், இந்திய இராணுவம் போஃபோர்ஸ் பீரங்கியுடன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் பார்டர் ஆக்சன் (BAT)  டீமை சேர்ந்த சுமார் 6 வீரர்களை இந்திய ராணுவம் கொன்றது. சிறப்பு சேவைக் குழு, கமாண்டோ படை மற்றும் பேட் குழு வீரர்களை பாகிஸ்தான் தனது எல்லையில் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடும் எல்லையில் அதிகரித்துள்ளது. இந்த குழுக்கள் அனைத்தும் மசூத் அசாருடன் தொடர்புடையவை. ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) அமைப்பு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பதிகளான ராவலகோட், கோட்லி மற்றும் முசாபராபாத் போன்ற இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பேட் வீர்கள் சட்டவிரோத ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News