காஷ்மீர் பாடலால் சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தானிய பாடகர் ஷஃப்கத் அமானத் அலி

இந்திய அரசு அரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஓராண்டு முடியும் தருவாயில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 09:42 AM IST
  • ‘Ja Chor Day Meri Waadi' என்ற சர்ச்சைக்குரிய பாடலை பாகிஸ்தான் பாடகர் பாடியுள்ளார்
  • பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு, Inter-Services Public Relations இந்தப் பாடலை பகிர்ந்துள்ளது
  • இந்தப் பாடலுக்காக ஷஃப்கத் அமானத் அலிக்கு ISPR, 3.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது...
காஷ்மீர் பாடலால் சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தானிய பாடகர் ஷஃப்கத் அமானத் அலி  title=

புதுடெல்லி: இந்திய அரசு அரசியலமைப்பின் 370 வது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஓராண்டு முடிவதையொட்டி, பாகிஸ்தான் பாடகர் ஷஃப்கத் அமானத் அலி, என் பள்ளத்தாக்கை தனியாக விட்டு விடுங்கள் என்ற பொருள் கொண்ட ‘Ja Chor Day Meri Waadi (Leave My Valley Alone)’ சர்ச்சைக்குரிய பாடலைப் பாடியுள்ளார். இந்த பாடலை பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு, Inter-Services Public Relations (ISPR)   பகிர்ந்துள்ளது.

ISPR இந்த பாடலுக்கான விளக்கத்தில், "காஷ்மீரிகள் ஒற்றுமையுடன்" இருப்பதாகவும், "370 வது சட்டப்பிரிவை ரத்துசெய்த ஓராண்டு முடியும் 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறுகிறது. "இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரில் (Indian Illegaly Occupied Jammu and Kashmir -IIOJK) லாக்டவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read | சீனாவின் CPECயால் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சிக்கல்

யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள பாடலுக்கான இணைப்பை ISPR ஆர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்காக ஷஃப்கத் அமானத் அலிக்கு ISPR, 3.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது...

'மிட்வா', 'தில் தாரா', 'மஞ்சலா' ('Mitwa', 'Dil Daara', 'Manchala') உள்ளிட்ட பல பாலிவுட் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகர் ஷஃப்காத். 2018 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியபோது இந்திய ரசிகர்களால் ஷஃப்கத் வெகுவாக பாராட்டப்பட்டார். 
பாடல் மகாத்மா காந்திக்கு பிடித்த 'வைஷ்ணவ ஜனதே' என்ற பிரபலமான இந்து பஜனைப் பாடிய ஷஃப்காத்தின் வீடியோ அப்போது வைரலானது.   

Trending News