அச்சுறுத்தல்களை சமாளிக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் தேவை என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளது சர்வதேச நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுக்குள் வைத்திருக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் உதவுவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக அந்நாட்டின் அரச ஊடகமான KCNA இன்று (திங்கள்கிழமை, 2022, மார்ச் 28) தெரிவித்தது.
பண்டமாற்று அல்லது எதற்கும் விற்க முடியாத "வலிமையான தடுப்பாற்றல் திறன்களை" நாடு தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் வட கொரிய தலைவர் கூறினார்.
கடந்த சில மாதங்களில் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை கிம் ஜாங் உன் பார்வையிட்டபோது இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அடங்காத வடகொரியா.! மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை
கடந்த வாரம் வியாழன் அன்று ஏவுகணை ஏவுவதற்குப் பங்களித்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களை கிம் சந்தித்துப் பேசியதாக, வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பரிசோதித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த ICBM ஆனது அக்டோபர் 2020 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது, இது ஆய்வாளர்களால் "மான்ஸ்டர் ஏவுகணை" என்று அழைக்கப்பட்ட இது, Hwasong-17 என அறியப்பட்டது.
"யாராலும் தடுக்க முடியாத வலிமைமிக்க திறன்கள் மற்றும் அபரிமிதமான இராணுவ சக்தியுடன் இருந்தால் மட்டுமே, ஒரு போரைத் தடுப்பதும், நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும் சாத்தியமாகும். அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்தவும், உதாசீனப்படுத்தவும் முடியும். அதுமட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகளின் மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும்" என்று கிம் கூறியதாக, வட கொரிய தேசிய செய்தி நிறுவம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு
மேலும் சக்திவாய்ந்த ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்குவது உறுதி என்று தெரிவித்த கிம், "தேசிய பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் இலக்கை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று உறுதி கூறினார்.
வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனை, அணு ஆயுத நாடுகளால் சோதிக்கப்பட்ட முந்தைய ICBM ஐ விட அதிக திறன்வாய்ந்தது என்பதோடு மேலும் அதிகமாகவும் பயணித்ததாகவும் தோன்றியது.
இந்த வெற்றிகரமான ஏவுதல், அணுஆயுதத் தடுப்பை அடைவதற்கான சரியான பாதையில் வடகொரியா செல்வதை காட்டுவதாகவும், மேலும் இதுபோன்ற சோதனைகளை உலகம் எதிர்பார்க்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | வட கொரியாவா வினோத கொரியாவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR