கடும் கோடையில் வற்றும் நதி! ஐரோப்பிய பொருளாதாரத்தையே பாதிக்கும் ரைன் ஆற்றின் நீர்மட்டம்

Summer VS Economics: இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2023, 07:23 PM IST
  • வற்றிப் போன ரைன் நதி
  • நீர்மட்டம் குறைவது விலைவாசியை அதிகரிக்கக்கூடும்
  • மழை வந்தால் வெயிலின் தாக்கம் குறையலாம்
கடும் கோடையில் வற்றும் நதி! ஐரோப்பிய பொருளாதாரத்தையே பாதிக்கும் ரைன் ஆற்றின் நீர்மட்டம் title=

ஜெர்மனியில் கோடைக்காலம் தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும், ஐரோப்பாவின் ஜீவநதியாக திகழும் ரைன் நதி வற்றிப் போனதால், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு நீர் மட்டம் குறைந்துள்ளதால், நாட்டில் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென்று உயர்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (2023 ஜூன் 16) பிற்பகலில் காப் என்ற முக்கிய சோக்பாயின்ட் 1.43 மீட்டர் அளவில் நீர்மட்டம் வந்துவிட்டதாக, அரசாங்க தரவுகள் காட்டுகின்றன. இது இன்னும் இருநாட்களில், அதாவது செவ்வாய்க் கிழமை அதிகாலையில் 16 சென்டிமீட்டர்கள் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பருவகாலத்தில் நதியின் நீர்மட்டம் இருப்பதை விட கீழே உள்ளது.

நீர் போக்குவரத்து

ரைன் நதி ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் இருந்து வடக்கு சாகாட் வரை 800 மைல் நீளத்திற்கு வளைந்து நெளிந்து பாயும் ஜூவ நதியாகும். இந்த நதியில் படகுகள் மூலம் எண்ணெய், இரும்புத்தாது, நிலக்கரி, சரளைக்கற்கள் உட்பட அன்றாட தேவைக்கான பொருட்கள் ஆகியவை ஐரோப்பா முழுவதும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | காணாமல் போன 88 ஆயிரம் கோடி... எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் - யார் பொறுப்பு?

ரைன் நதியின் நீர்மட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் நதியில் நீர்மட்டம் குறைந்தபோது, நாட்டின் பொருளாதாரத்தில் பல இடையூறுகள் ஏற்பட்டன. நீர்மட்டம் குறைந்திருப்பதால், படகுகளின் அதிகபட்ச சுமந்து செல்லும் திறனில் 60% மட்டுமே ஏற்றப்படும், இது வர்த்தக போக்குவரத்திற்கான  செலவு உட்பட பல்வேறு சிக்கல்கலை ஏற்படுத்தும்.  

ஆல்ப்ஸ் மலையின் ஜீவநதி

ஆல்ப்ஸ் மலையிலிருந்து வட கடல் வரை நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் வளைந்து செல்லும் ரைன் நதியில் கடந்த ஆண்டு, தண்ணீர் மிகவும் குறைந்ததால், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, எண்ணெய் சுத்திகரிப்பு, மின் உற்பத்தி மற்றும் பல துறைகள் பாதிக்கப்பட்டன.

கடும் வெயில் நிலவும் கோடைக்காலத்தைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்ட் மாதம் முதல், கடந்த ஆண்டை விட மோசமான நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருளாதார ரீதியிலான கவலைகள் ஐரோப்பா முழுவதும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 54 பேர் பலி! 400 பேர் மருத்துவமனையில்! காரணம் என்ன?

போக்குவரத்து செலவு உயர்வு
ஏற்கனவே இந்த ஆண்டு, தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே மற்றும் நெதர்லாந்திற்கு இடையிலான தற்போதைய போக்குவரத்துச் செலவு ஐந்தாண்டு சராசரியை விட இருமடங்காக இருப்பதால், ஆற்றில் எரிபொருளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரித்துவிட்டன. 

"ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், சில மழைப்பொழிவை எதிர்பார்க்கிறோம், இது நீர் மட்டங்களின் கீழ்நோக்கிய போக்கை குறைந்தபட்சம் தற்காலிகமாக நிறுத்தக்கூடும்" என்று ஜெர்மன் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் முன்னறிவிப்பாளர் டென்னிஸ் மெய்ஸ்னர் கூறினார். குறைந்தபட்சம் ஜூலை இறுதி வரை "முக்கியமான ஓட்ட நிலைமைகளை" அவர் எதிர்பார்க்கவில்லை.

ரைன் நதியில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த நீர் மட்டம்

ரைன் நதியில் நீர் மட்டம், பொதுவாக ஆகஸ்ட் முதல் நவம்பர் காலத்தில் மிகக் குறைவாக இருக்கும். ரைன் நதியின் நீரோட்டமானது, கோடையில் பெய்யும் மழை மற்றும் நிலவும் வெப்பநிலை அளவைப் பொறுத்தது.

இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க | பேட்மிண்டனில் சாதனை! இந்தோனேஷிய ஓபன் கோப்பை வென்ற ரங்கிரெட்டி சிராக் ஜோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News