புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடுமையான வெப்பம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயாளிகள் காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து புகார் கூறுவதாக மருத்துவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
ஜூன் 15ம் தேதியன்று 20 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே 23 நோயாளிகளும், நேற்று அதாவது ஜூன் 17ம் தேதியன்று 11 நோயாளிகளும் இறந்ததாக மாவட்ட மருத்துவமனை பல்லியாவின் பொறுப்பு மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | காணாமல் போன 88 ஆயிரம் கோடி... எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் - யார் பொறுப்பு?
லக்னோவில் இருந்து ஒரு குழு வந்து கண்டறியப்படாத நோய் உள்ளதா என ஆய்வு செய்ய இருப்பதாக, அசம்கர் வட்டத்தின் கூடுதல் சுகாதார இயக்குநர் டாக்டர் பிபி திவாரி கூறினார். அதிக வெப்பம் அல்லது குளிர் காலத்தில், சுவாச பிரச்சனை உள்ள நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக அளவில் சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தற்போது நிலவும் கடும் வெப்பம், அவர்களின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று டாக்டர் திவாரி ஊகங்களை தெரிவித்தார். சுகாதார அதிகாரியின் கூற்றுப்படி, மருத்துவமனையில் தினமும் சராசரியாக 7 முதல் 9 இறப்புகள் பதிவாகின்றன.
“மாவட்ட மருத்துவமனையின் பதிவுகளின்படி, 54 இறப்புகளில், 40 சதவீத நோயாளிகள் காய்ச்சல் மற்றும் 60 சதவீதம் பேர் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, மாவட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே வெப்பத் தாக்குதலால் இறந்துள்ளனர்” என்று அவர் பிடிஐயிடம் கூறினார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 125 முதல் 135 நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனை அழுத்தத்தில் நெருக்கடியை சந்தித்து வருவதாக தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார்.
"ஜூன் 15 அன்று, மாவட்ட மருத்துவமனையில் 154 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர், அதில் 23 நோயாளிகள் பல்வேறு காரணங்களால் இறந்தனர். “ஜூன் 16 அன்று 20 நோயாளிகள் இறந்த நிலையில், பதினொரு பேர் மறுநாள் காலமானார்கள். அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | Indian Railways: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ரயில் நிலையம் - அட எங்க இருக்கு தெரியுமா?
சனிக்கிழமையன்று, அசம்கர் பிரிவின் சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஓ.பி. திவாரி, லக்னோவிலிருந்து சுகாதாரத் துறையின் குழு பல்லியாவுக்கு வந்து சோதனைகளை நடத்தும், அதன் பிறகு இறப்புக்கான காரணங்கள் கண்டறியப்படும்.
"ஒருவேளை வேறு ஏதேனும் நோய் இருந்தால் அதைக் கண்டறிய வேண்டும். , அதைக் கண்டறிய முடியவில்லை. தற்போது வெப்பநிலையும் அதிகமாக உள்ளது. கோடை மற்றும் குளிர்காலங்களில், நீரிழிவு நோயாளிகள் மற்றும் சுவாசக் கஷ்டம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடையே இறப்பு விகிதம் அதிகரிக்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.
மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க, குளிரூட்டிகள், மின்விசிறிகள் மற்றும் ஏசிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, 15 படுக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெட்டர் ரவீந்திரகுமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பேட்மிண்டனில் சாதனை! இந்தோனேஷிய ஓபன் கோப்பை வென்ற ரங்கிரெட்டி சிராக் ஜோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ