தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்றார்

Last Updated : May 10, 2017, 03:22 PM IST
தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்றார் title=

தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை ஊழலில் சிக்கியதால் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க மே மாதம் 9-ம் தேதி(செவ்வாய் கிழமை) அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் 13 பேர் போட்டியிட்டனர் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் முன்னணியில் இருந்தார். முடிவில் அவர் அபார வெற்றி பெற்றார். அவர் 41.1 சதவீத வாக்குகள் பெற்றார். மூன் ஜயே-இன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சியோல் நகரமே விழாக்கோலம் பூண்டது. 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜயே- இன், அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்த அதிபர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஹாங்ஜோன் பையோ 2-வது இடம் பிடித்தார். அவருக்கு 24.03 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. மிதவாதியான அகின் சியோல்-சூ 3-வது இடம் பிடித்தார். அவர் 21.4 சத வீதம் ஓட்டுகள் பெற்றார். 

புதிய அதிபராகும் மூன் ஜயே- இன்னுக்கு தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா மற்றும் அண்டை நாடான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending News