இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே

Gotabaya rajapaksa Resigns : இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Jul 14, 2022, 09:18 PM IST
  • இலங்கை மக்களின் தொடர் போராட்டம்
  • அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே
  • ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார்
இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே title=

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலதிவிற்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று தனது ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  இன்று காலை அவர்  கையெழுத்து இடம் பெறாத கடிதம் ஒன்று பரவி ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது. 

ஆனால் அது தவறான போலியான கடிதம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

gotabaya rajapaksa resignation letter

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற  கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து துபாய் சென்று அங்கு நிரந்தரமாக  தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் இதற்காக, அங்கு தனி சொகுசு பங்களா தயாராவதாகவும் தகவல்கள்  தெரிவித்தன. தம் ராஜினாமாவை அறிவிக்காமல்  அதிபராக தொடர்ந்து  இருந்தால், சட்டப்பாதுகாப்பு  இருக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தங்குவதில் சிக்கல் வராது என கோத்தபய நம்புவதாகக் கூறப்பட்டது.  

மேலும் படிக்க | Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய  ராஜபக்ச மட்டுமல்ல, பிரதமர் பதவியில் இருந்து ரணிலும் விலக வேண்டும் என்றுதான் கடந்த 2 வாரங்களாகப் போராட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில், இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றது போராட்டத்தை மேலும் அதிகமாக்கியது.

இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, அதிபர் பதவி விலகினால், அடுத்த அதிபராக பிரதமராக இருப்பரே  வருவார். பிரதமரும் பதவியில் இல்லாவிட்டால், அவருக்கு அடுத்தபடியாக உள்ள நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக பதவியேற்பார். அதன்பின், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும் எம்பி ஒருவர், அதிபராக பதவியேற்க வேண்டும் என்பதுதான் விதி.

பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறிய கோத்தபய, ராஜினாமா கடிதம் கொடுக்காமல் இருந்தது பெரும் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. இலங்கையின் அரசியல் சாசன நிபுணர்களும் குழப்பம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் ராஜபக்சேவின் ராஜினாமா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களைப் பொறுத்தவரை, கோத்தபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியில் இருக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளனர். அவர்கள் இருவரும் விலகும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News